உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம்; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி ஆணையம்; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.ஆணவ படுகொலை தொடர்பாக சட்டசபை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது. உலகம் அறிவு மயம் ஆகிறது. ஆனால் அன்பு மயம் ஆவதை தடுக்கிறது. சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது. ஆணவப் படுகொலைக்கு ஜாதி மட்டும் காரணம் இல்லை.

முற்றுப்புள்ளி

எதற்காக நடந்தாலும் கொலை, கொலை தான். அனைத்து வகையான ஆதிக்க மனோ பாவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூகங்களின் பெயர்களில் 'ன்' விகுதியை நீக்கி 'ர்' என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரை சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆணையம்

ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பிரசாரத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. சீர்திருத்தப் பிரசாரத்தையும், குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஜாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.

தனி சட்டம்

சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆணவ படுகொலையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு உரிய சட்டம் இயற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பிரேம்ஜி
அக் 18, 2025 12:36

ஊழலை தடுக்க ஒரு ஆணையம் அவசரத் தேவை!


V Venkatachalam
அக் 17, 2025 20:37

அது சரி, முதல்வரே. ஆணவக்கொலைகளை தடுக்க ஆணையம். ஆஹா. அப்ப சாதி ஆணவக் கொலைகளுக்கு தனித்தனி ஆணையமா? ..ம்ம்ம்.. ஓகே ஓகே . ஆணவ அடிகளை அடக்க தனி ஆணையமா? இந்த ஆணையங்கள் போட்டீங்கன்னா இன்னா அர்த்தம்? பொறுக்கிங்க அதிகமாயிட்டானுங்கன்னுதானே அர்த்தம்?


Haja Kuthubdeen
அக் 17, 2025 18:57

இது எத்தனையாவது ஆனையம்....


Barakat Ali
அக் 17, 2025 20:57

கரூர் சம்பவத்தை மறக்கடிக்க இதுவும் ஒரு முயற்சி .......


தாமரை மலர்கிறது
அக் 17, 2025 18:36

சாதி அரசியல் செய்ய நாயுடு பெயர் வைப்பீங்க. அதே சமயத்தில் ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனி ஆணையம் என்று கதை விடுவீங்க. ஏமாறுவதற்கு மக்கள் அறிவிலி அல்ல.


kjpkh
அக் 17, 2025 18:35

ஆணையத்திற்கு மேல் ஆணையம் போதுமடா சாமி. ஆணையம் தான் தீர்வு என்றால் தாங்காது பூமி. சோதனை மேல் சோதனை.


Ramesh Sargam
அக் 17, 2025 18:28

ஜாதி ஆணவ கொலைகளை விட்டு மற்ற வகையான கொலைகள் தொடரலாம். அப்படித்தானே முதல்வரே?


Ramanujam Veraswamy
அக் 17, 2025 16:56

Mere waste of public money in yhe name of Commission. Let the Govt act with Iron Hand.


Nanchilguru
அக் 17, 2025 15:50

இவங்கள துரத்தறதற்கு ஒரு ஆணையம் வேண்டும்


Modisha
அக் 17, 2025 15:33

அம்பது வருஷம் முன்னாடி செத்தவன் ஜாதியை ஒழிச்சிட்டான் என்று பீலா உட்டாங்களே .


மோகன்
அக் 17, 2025 15:28

இன்னும் ஒரு வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை