உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!

முதல்வர் செல்லும் சாலையில் கழிவு நீர் ஓடை அலங்கார துணி கொண்டு மறைப்பு; மதுரையில் நடந்த சம்பவத்துக்கு கருத்து சொல்லுங்க மக்களே!

சென்னை: மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ள நிலையில், அவர் செல்லும் வழியில் இருந்த பந்தல்குடி கழிவு நீர் கால்வாய்அலங்காரத் துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. இதுகுறித்து உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே!மதுரையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதனால் மதுரைக்கு இன்று (மே 31) முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j1osbzlc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் செல்லும் வழித்தடத்தில் உள்ள பந்தல்குடி கழிவு நீர் கால்வாய், அலங்காரத்துணி கொண்டு மறைக்கப்பட்டது. போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் மாறி மாறி படம் பிடித்த நிலையில், அவற்றை அவசரம் அவசரமாக அகற்றினர். அதற்குள் யாரோ போன் செய்த நிலையில், பாதியை அகற்றிவிட்டு பாதியை அகற்றாமல் அப்படியே விட்டுச் சென்றனர். தற்போது இந்த செயல் இணையத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து, வீடியோ மற்றும் படங்களை பார்த்துவிட்டு உங்களது கருத்தை கமெண்ட் செய்யுங்கள் வாசகர்களே! கிளம்புது விமர்சனம்! இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மதுரையில் திராவிட மாடல் முதல்வர் நடைபயணம் போகும் போது கால் வலிக்க கூடாது, அவர் நடக்கும்பாதைகள் மட்டும் புதிய சாலைகள். அவர் கார் செல்லும் ரோடுகள் அருகில் ஓடும் கழிவுநீர் ஓடைகளை பார்க்க கூடாது என்பதற்காக பல கிலோ மீட்டர் வரை அலங்கார துணியால் மறைத்து மக்களின் வரிப்பணம் எப்படி தி.மு.க ஆட்சியில் செலவழிக்கப் படுகிறது . இந்த பகுதியில்தான் அதிகமாக இஸ்லாமிய , பட்டியல் இனமக்கள் வாழ்கிறார்கள் வாக்களித்த மக்களே பாருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 111 )

baala
ஜூன் 30, 2025 14:43

இதை ஒன்றிய அரசிடம் இருந்து கற்று கொண்டு இருப்பார்கள்


chidhambaram
ஜூன் 26, 2025 12:37

ஒரு நொடி கூட பார்க்க சகிக்கல , அந்த இடத்தில் தான் மக்கள் ஆயுளுக்கும் வாழ்கிறார்கள் ...மக்கள் தான் சிந்திக்க வேண்டும், .... அரசியல்வாதிகளுக்கு ஒரே அபிப்ராயம் தான் , இவர்கள் காசு வாங்கிட்டு தானே ஒட்டு போடுறாங்க இல்ல வாக்கு சாவடி பக்கம் போறது இல்ல


sasikumaren
ஜூன் 24, 2025 01:17

நல்லவன் தவறு செய்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் ஆனால் சுடலை ஒரு விஷம் என்ன ஒன்றும் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை வோட்டு போடும் மூடர்களை தான் திட்டி தீர்க்க வேண்டும்


KARTHICKEYAN R
ஜூன் 16, 2025 14:45

மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடங்களில் சென்று பார்த்தாலே தெரியும் இவர்களின் நிலை. கடற்கரை சாலையில் மட்டும் பல பலவென இருக்கும் மற்ற இடங்களில் எல்லாம் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் இருக்கும். முதல்வர் மட்டும் சொகுசு வாழ்கை. இது தான் தமிழ்நாடு நிலை.


ashok kumar R
ஜூன் 06, 2025 16:16

அன்னார்து பார்க்கையில் சாக்கடை கட்டு. அதன் ஓரத்தில் குடிசை கட்டு. பொன்னான ஆட்சி என்று பெயரை சூட்டு இங்கு பூமி சிரிக்கும் அங்கு சாமி சிரிக்கும். நெஞ்ஞம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜ.


ashok kumar R
ஜூன் 06, 2025 16:07

இருண்டு பக்கம் கடிவாளம்.


sasidharan
ஜூன் 06, 2025 14:03

இன்றைய ஆட்சியின் அவல நிலை இப்படித்தான் உள்ளது. மக்கள் மனநிலை மாறி நல்லாட்சி மலர வேண்டும்.


Writer
ஜூன் 05, 2025 08:23

குஜராத் மாடலின் பாதிப்பு தான்.


Matt P
ஜூன் 04, 2025 11:44

அசிங்கங்களை இப்படியே மறைச்சு மறைச்சு தான் அவனுகளுக்கு பழக்கம் ...ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் அலங்காரத்துணி உள்ளெ இருக்குமாம் ஈரும் கழிவு நீர் பேனும் ...


Matt P
ஜூன் 04, 2025 11:41

அசிங்கமான வூழலை அழகிய வார்த்தைகள் பேசி மறைக்கப்பட்டது போல ....இதுவும் பழக்க தோஷம்.


சமீபத்திய செய்தி