உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நான்கரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: உறவினரிடம் விசாரணை

நான்கரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: உறவினரிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கரை வயது பெண் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தங்கள் நான்கரை வயது குழந்தையுடன் தம்பதி வந்திருந்தனர். நேற்று மதியம் அவர்களது நான்கரை வயது மகளை காணவில்லை. தேடிய போது அருகில் கொட்டகை ஒன்றில் குழந்தை அழுது கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.இன்று காலை சந்தேகத்தின் பேரில் குழந்தையின் உறவினர் தமிழ்வாணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 24ம் தேதி மூன்றரை வயது பெண் குழந்தை 16 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சர்ச்சையாக பேசிய கலெக்டர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் மயிலாடுதுறையில் மீண்டும் ஒரு பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 03, 2025 16:29

பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெயரை வெளியிடக்கூடாது ..... சரி ..... யாரை போலீஸ் விசாரிக்கிறது ?? வெளியிடலாமே ?? மர்ம மனிதர்களா ??


Kanns
மார் 03, 2025 13:39

People Dont Believe Stories of Case-News-Vote-Power Hungry Criminal Gangs. GenuineGrave Offences Must be Investigated& TriedFast UnBiasedly & Punished IF Material Evidences& Circumstances Exists Witnesses are mostly Cookedup. However AS Atleast 50% Cases are False & Cookedup by Vested-Biased-Selfish-Conspiring Case/Vote/ News/Power Hungry & PowerMisusing Criminal Gangs. All Such PowerMisusing Criminals incl False Complainants MUST be Punished in Same Trials. Unti then, People Dont Believe Stories of Such Criminal Gangs.


sridhar
மார் 03, 2025 10:44

எந்த கொம்பனாலும் ….ஆக , ஆக , ஆக …


Ganapathy Subramanian
மார் 03, 2025 09:49

புதிய கலெக்டரும் பழைய மொந்தையில் புதிய கள் தான் போலிருக்கிறது.


Narayanan Muthu
மார் 03, 2025 09:38

நீதி துறையில் அரசியல் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துமேயானால் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறார்கள்.


Barakat Ali
மார் 03, 2025 13:05

சர்க்காரியா விசாரணை முடிவுகளில் இருந்து, செபா, பொன்முடி, தங்கம் தென்னரசு விவகாரம் வரை மொத்தமா ஒரே வாக்கியத்தில் சொல்லிட்டீங்க.. நீங்க திமுகவின் அபிமானியா இருந்தாலும் நேர்மையை எதிர்பார்க்கிறீங்க..... பாராட்டுக்கள் ....


Nagarajan D
மார் 03, 2025 09:33

நீதி துறை தான் காரணம்.. எல்லா சீரழிவிற்கும் நம் நாட்டு நீதி துறை தான் காரணம். எந்த குற்றமாக இருந்தாலும் கடுமையான தண்டனை அதுவும் தாமதமில்லாமல் நிறைவேற்றினால் குற்றங்கள் குறையும். வாய்தா கொடுப்பதிலும் தீர்ப்பை தள்ளிவைப்பதிலும் காட்டும் அக்கறை தண்டனை தருவதில்லை


புதிய வீடியோ