உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களின் மொபைல் போன் பறிமுதல்

பாலியல் வன்கொடுமை எப்.ஐ.ஆர்., கசிந்த விவகாரம்: பத்திரிகையாளர்களின் மொபைல் போன் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் 'லீக்' ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.,வை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் இணையத்தில் கசிந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எப்.ஐ.ஆர்., 'பிளாக்' செய்யப்படவில்லை என்று போலீஸ் கமிஷனர் அருண், பேட்டியில் தெரிவித்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r9f2v5w4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது பற்றி, போலீஸ் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐகோர்ட் நீதிபதிகளும் கேள்வி எழுப்பினர். சுப்ரீம் கோர்ட்டும் சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில், எப்.ஐ.ஆர்., நகல் 'லீக்' ஆன சம்பவத்தில் பல்வேறு நபர்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், 3 பத்திரிகையாளர்களின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kanns
ஜன 30, 2025 06:53

There Must be Equality.


Barakat Ali
ஜன 29, 2025 19:22

கருப்பு கவுனு மன்றம் ரொம்ப குடைஞ்சா அந்த ஞானம் போடப்பட வாய்ப்பு ......


N.Purushothaman
ஜன 29, 2025 18:44

முதல் தகவல் அறிக்கை பொது தளத்திற்கு வந்த பிறகு அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.... வழக்கின் முக்கிய குற்றவாளியை சுற்றியே விசாரணை இருக்க வேண்டுமே தவிர பதிவிறக்கம் செய்தவர்களை கண்டுபிடித்து சிறப்பு விசாரணை குழு என்ன செய்ய போகிறது ? சென்னை உயர்நீதிமன்றம் கூட பத்திரிக்கையாளர்கள் தொடந்த வழக்கில்தற்போது இதே கருத்தை கூறி உள்ளது ...


N.Purushothaman
ஜன 29, 2025 18:23

இதே போல அமைச்சர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து இந்த சிரிப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துமா ? இவர்களின் கஸ்டடியில் இருக்கும் அந்த காமனுக்கு ஜீப்பில் செல்லும் போது எப்படி செல் போன் கிடைத்து அவன் யாரிடமோ பேசினான் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே ...அது எப்படி நடந்தது ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2025 17:33

பெரும்பாலான ஊடகங்கள் ஆர் எஸ் பி குறிப்பிட்ட வகையைச் சார்ந்தவை ... இந்த அவலம் தமிழகத்தில் நாற்பதாண்டுகளாக நிலவுகிறது .... ஆகவே நடவடிக்கையின் நோக்கம் நியாயமானதே .....


ram
ஜன 29, 2025 15:46

மூன்று நபர்களும் திருட்டு திமுக மீடியா ஊப்பிஸ்


அருணாசலம்
ஜன 29, 2025 15:39

பத்திரிகை சுதந்திரம் என்பதற்கு அளவு இல்லையா? யோக்கியர்கள் உண்மையை சொல்லியிருக்கலாம். யார் தடுத்தார்கள்?


KavikumarRam
ஜன 29, 2025 15:28

மீசைக்கார பத்திரிகையாளர் மொபைல் ஃபோன வாங்கிப்பாருங்க. கண்டிப்பா எல்லா சீனும் அதுல இருக்கும்.


தமிழன்
ஜன 29, 2025 15:07

இது அதுக்கு இல்லை.. சம்பந்தப்பட்டவர்களைக்காப்பாற்ற.. குறிப்பாக காவல் துறையை சேர்ந்தவர்களை காப்பாற்ற என்று யாராவது நினைக்க போறாங்க.. இதுக்கு பின்னாடி வேறு ஒரு கதை இருக்கு.. அதை இந்த ஆட்சி முடிந்த பிறகு செய்திகளாக வரும்.


தமிழன்
ஜன 29, 2025 15:05

factory setting செய்து விட்டால் எப்படி தகவல்களை எடுக்க முடியும். advanced software கூட எடுக்க உடையாத படி செய்ய வேறு நிறைய வழிகள் இருக்கிறது.. இதை எல்லாம் செல்போன் பயன்பாட்டாளர்கள் தெரிந்து கொண்டால் காவல் துறை இனி மொபைல் போனை பறிமுதல் செய்து அதில் உள்ள தகவலகை மீடியாவில் வெளியிட வாய்ப்பு இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை