உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூடி மறைக்க முயற்சித்த ரயில்வே போலீஸ்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மூடி மறைக்க முயற்சித்த ரயில்வே போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சட்டசபை கூட்டம் நடப்பதால், சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட சம்பவத்தை, போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த, 22 வயது பெண், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இரு தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறி, திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த வாலிபர், திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, இளம்பெண் கூச்சலிட்டத்தால் தப்பிக்க முயன்ற வாலிபரை, ரயில் நிலையத்தில் இருந்தோர் பிடிக்க முயன்றனர். அதற்குள், அந்த வாலிபர் ஓட்டம் பிடித்து விட்டார்.இச்சம்பவம் குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வன்கொடுமை உள்ளிட்ட சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், சட்டசபை கூட்டம் நடப்பதாலும், தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்து வருவதாலும், இதை போலீசார் மூடி மறைக்க முயற்சித்துள்ளனர்.எனினும் சில போலீசார், சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Padmasridharan
ஏப் 04, 2025 13:27

இது திருவொற்றியூர் பாலியல் தொல்லை. இது போல் திருவான்மியூர் கடற்கரையில் சில காவலர்கள் பாலியல் தொல்லை தந்துகொண்டு இருக்கிறார்கள். முதலில் மிரட்டி பணம், பின்பு அசிங்கமாக பேசி, தங்கள் அறைக்கு கொண்டு செல்கின்றனர். இதுவும் வெளியில் வாராமல் இருக்கின்றதா / மறைக்கப்படுகின்றதா. தவறுகளை மறைக்கும் காவலர்களினால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஏனென்றால் காவலர்களுக்கு suspension / transfer தானே என்று தைர்யம். Dismiss பண்ணவும் மாட்டார்கள். இவர்களுக்கு IPC யும் இல்லை


Mecca Shivan
ஏப் 04, 2025 12:15

சட்டசபை கூத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?


panneer selvam
ஏப் 04, 2025 16:10

It is their duty to protect Dravidian Model


Anantharaman Srinivasan
ஏப் 04, 2025 11:38

தினமும் நடக்கும் பாலியல் தொல்லை கேஸ்களை போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்தால் தெருவில் ஸ்டாலின் உதயநிதி போஸ்டர்களை ஒட்ட இடமிருக்காது.


raman
ஏப் 04, 2025 11:23

ரயில்வே போலீஸ் மத்திய அரசு படையல்ல. அந்த அந்த மாநில அரசுகள் தங்கள் போலீஸ் படைகளை ரயில்வேக்கு அனுப்புவார்கள். அதனால்தான் அவர்கள் மாநில அரசுக்கு விசுவாசமாக இருக்கின்றனர்.


venugopal s
ஏப் 04, 2025 11:18

சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகின்றது, போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர். அதற்குள் நீங்களாகவே கற்பனையாக ஒரு காரணத்தை கண்டு பிடித்து முடிவு செய்வது அபத்தமானது.


S.V.Srinivasan
ஏப் 04, 2025 09:48

இதுவும் யார் அந்த சார் சம்பந்த பட்ட விஷயமா இருக்குமோ. ஒரே மர்மமா இருக்குப்பா.


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 09:36

திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற நிலைக்கு சென்று விட்டது , தமிழச்சி , சுந்தரவல்லி, கனிமொழி இவர்களுக்கு இப்போது வாய்க்குள் எதையாவது வைத்து அடைத்திருப்பார்கள் ?


m.arunachalam
ஏப் 04, 2025 08:57

பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நபரை சீக்கிரம் பிடித்து விடுவார்கள் .


நிக்கோல்தாம்சன்
ஏப் 04, 2025 10:39

அவனுங்க ? இந்த நேரம் கருத்து போட்டாங்க என்று என்னையும் உங்களையும் தேடிக்கொண்டிருப்பார்கள்


Palanisamy Sekar
ஏப் 04, 2025 08:02

யார் அந்த சார்ன்னு எல்லோருக்குமே தெரிந்தும் கூட வாய் மூடி மௌனமாக இருப்பது எவ்வளவு குற்றமோ அதேதான் ரயில்வே போலீசார் செய்ததும். ஒருவேளை முக்கிய புள்ளியிடமிருந்து போன்கால் வந்திருக்குமோ என்னவோ யார் கண்டார்கள்? ஆட்சியா நடக்குது ? உள்ளூர் பிரச்சினையையே கட்டுப்படுத்த இயலாத வயதான முதல்வருக்கு இப்போதெல்லாம் ஓவரா பில்டப்பில் இந்திய அரசியலுக்கு போறாராம். என்னத்த சொல்ல


புதிய வீடியோ