உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது

சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில், தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ், 75; மத போதகர். இவர், 2011ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரி பெரியார் தெருவில், 'தம்பி இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். பிரியா, 40, என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.தற்போது இல்லத்தில், 18 வயதுக்குட்பட்ட 16 சிறுவர்கள், 18 சிறுமியர் உள்ளனர். இவர்களில், எட்டு சிறுமியர், அருகில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கின்றனர். சிறுமியரை காரில் பள்ளிக்கு அழைத்து சென்றுவர, ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த பழனி, 52, என்பவர், ஓராண்டுக்கு முன் ஓட்டுநராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், ஓட்டுநர் பழனி, அருள்தாஸ் இருவரும், தொடர்ந்து எட்டு சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணியளவில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குழுவினர், ஆதரவற்றோர் இல்லம் சென்று, அங்குள்ள சிறுமியரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அருள்தாஸ், ஓட்டுநர் பழனி இருவரும், சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கு, மேலாளர் பிரியா உடந்தையாக இருந்தது தெரிந்தது.இதையடுத்து, இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர் - சிறுமியர், அரசு காப்பகத்திற்கு மாற்றப் பட்டனர். இதுகுறித்து, வண்டலுார் மகளிர் காவல் நிலையத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், அருள்தாஸ், பழனி, பிரியா மூவரையும் நேற்று கைது செய்தனர். அப்போது, அருள்தாஸ் நெஞ்சுவலிப்பதாக கூறினார். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.தொடர்ந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரியா, பழனி இருவரும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்றிரவு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிந்தனை
ஜூலை 13, 2025 17:03

தவறு செய்தது சுப்பிரமணி கோவிந்தன் என்றால் கடுமையாக தண்டிக்க வேண்டும் அல்லது பீட்டர் லியாகத் போன்றவர்கள் என்றால் சிறுபான்மையினர் நல சட்டத்தின்படி அவர்களை விடுவித்து அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும் ஏனென்றால் இது மதசார்பற்ற அரசு


Vijay D Ratnam
ஜூலை 13, 2025 16:27

விடுங்க பாஸ், இந்த கிருஸ்தவ மதபோதகர்கள் சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்வது, போக்ஸோ சட்டத்தில் கைதாகி ஜாமினில் வெளியே வருவது, கன்னியாஸ்திரிகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்வது, க்ரூப் செக்சில் ஈடுபடுவது, ஹோமோ செக்சில் ஈடுபடுவது இதெல்லாம் காலங்காலமாக உலகெங்கும் நடப்பதுதான். இத்த போயி பெருசாக்கிட்டு. இப்போ என்ன கேரளாவில் 2014 - 2016 காலகட்டத்தில் சர்ச்சில் வைத்து கன்னியாஸ்த்ரியை கற்பழித்த பிஷப் ஃப்ரங்கோ முல்லாக்கல் என்னும் பாலியல் குற்றவாளியை தூக்கிலா போட்டுவிட்டார்கள். அந்த பெண் கான்வென்டில் இருக்கும் சிஸ்டர்ஸ்களை காப்பாறுங்கள் என்று கதறினாரே , என்னாச்சு. இருக்கவே இருக்கு ஜாமீன், பெயிலு.


Ramesh Sargam
ஜூலை 13, 2025 12:50

அவர்கள் மதபோதகர்கள் அல்ல, பாதகர்கள், பாவிகள். கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் திமுக அரசு அந்த சண்டாளர்களை தண்டிக்காது. ஏன் என்றால் அவர்கள் வாக்கு திமுகவுக்கு முக்கியம்.


தமிழ்வேள்
ஜூலை 13, 2025 11:33

இயேசப்பாவின் போதனைகள் படி சொர்க்கத்தைக் காட்டும் புனித பணியை முன்னெடுப்பு செய்திருப்பார் போல...


SRIRAM
ஜூலை 13, 2025 10:58

இதெல்லா சங்கிகளின் சதி.. இப்படிக்கு அப்பா.... உதவாத பிளந்து குருமா


Sridhar
ஜூலை 13, 2025 10:26

These fellows become preachers only for this. Convert rice bags


sridhar
ஜூலை 13, 2025 10:24

இந்த காப்பகம் நடத்துவதே இந்த நோக்கத்தில் தான். சமூக சேவை எல்லாம் கிடையாது. நம் சமுதாயத்தை பீடித்த இந்த நோய்கள் என்றைக்கு ஒட்டுமொத்தமாக ஒழியுமோ. இந்த கழிசடைகள் திராவிட அரசியல்வாதிகள் ஆதரவில் தான் ஆடுகின்றன .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 09:13

வயது காரணமாக இனி ஜாமீன் கொடுத்துவிடுவார் நீதிபதி , பன்றிகளை கடுங்குளிரில் வாட்டி எடுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும்


Arul. K
ஜூலை 13, 2025 08:39

அருள்தாஸூக்கு வந்தது நெஞ்சு வலி அல்ல .....


Padmasridharan
ஜூலை 13, 2025 08:23

இவங்க ஒவ்வொரு குடும்பங்களப்பத்தி சேகரிச்சு வெளியிடுங்க. மதத்தின் பெயரில் என்னென்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க உலகத்தில


சமீபத்திய செய்தி