உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளருக்கு காப்பு

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை: விடுதி காப்பாளருக்கு காப்பு

கமுதி : கமுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி காப்பாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு, அப்பள்ளியின் விடுதி காப்பாளர் இளைஞர் கவியரசன் (23) பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தாய் நேற்று முன்தினம் கமுதி மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விடுதி காப்பாளர் கவியரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramki_64
ஜூன் 28, 2025 16:49

நீங்கள் சரியாக சொன்னீர்கள்


Bhaskaran
ஜூன் 27, 2025 04:11

யோக்யனாக இருந்தால் அவன் சிறுத்தை. குருமா பொன்மொழி


Barakat Ali
ஜூன் 25, 2025 20:51

அடங்கமறு ........ அத்துமீறு ????


Ramesh Sargam
ஜூன் 25, 2025 19:52

தமிழகத்தில் இப்பொழுது உள்ள திமுக ஆட்சியில் குழந்தை முதல் பாட்டி வரையில் பாலியல் வன்கொடுமை. அட, திருநங்கைகளுக்கு பாலியல் வன்கொடுமை. இப்ப பள்ளி மாணவனுக்கும் பாலியல் தொல்லை. இனியாவது தமிழக மக்கள் வரும் தேர்தலில் அந்த திருட்டு திமுகவினர் கொடுக்கும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு அதை வாங்கி மீண்டும் அந்த திமுகவை தேர்ந்தெடுக்கக்கூடாது, ரோஷம், மானம், சுயமரியாதை இருந்தால்.


புதிய வீடியோ