சதாப்தி இன்ஜின் கோளாறு; நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
திருப்பத்துார் : கோவையிலிருந்து சென்னை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் காக்கங்கரை - திருப்பத்துார் இடையே சென்ற போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் சேலம் வழியாக ஜோலார்பேட்டை நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை பாசஞ்சர், அகிலியா - நகரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டை ரயில் விபத்து தடுப்பு மற்றும் மீட்பு குழுவினர், இன்ஜின் பழுதை சரி செய்தனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரத்துக்கு பின் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்களும் தாமதமாக புறப்பட்டன.