உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ஆடுகள் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு, பெங்களூரு பாராசூட் ரெஜிமென்ட் பயிற்சி மையத்தில் வீரர்கள் தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும் போது, அங்கு பொதுமக்கள் நடமாட, கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மகாமுனி என்ற விவசாயியின், செம்மறி ஆடுகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில், ஆறு ஆடுகள் இறந்தன. இரு ஆடுகள் படுகாயம் அடைந்தன. இதுகுறித்து வையம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஜன 15, 2025 17:05

ஆடு மாடுகளுக்கு இந்தி சொல்லிக் கொடுங்க. அந்த பயிற்சி நிறுவனத்தில் இந்தில தான் பேசுவாங்க. நம்ன ஆடுங்களுக்கு தமிழ் தான் தெரியும்.


பேசும் தமிழன்
ஜன 15, 2025 13:44

அடப்பாவிகளா.... பேச வாயில்லா ஜீவன்களை கொன்று விட்டீர்களே???


அப்பாவி
ஜன 15, 2025 17:03

வாயில்லேன்னா அது யார் தப்பு? நீ கஷ்டப்பட்டா அது உன் தப்பு.


Pandi Muni
ஜன 15, 2025 09:10

விவசாயிக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்


அப்பாவி
ஜன 15, 2025 08:58

மனுசனுக்கே பாதுகாப்பு கிடையாது. சரி சரி.. காணும் பொங்கலுக்கு பிரியாணி செஞ்சு சாப்புடுங்க.


Kasimani Baskaran
ஜன 15, 2025 07:10

இரும்பு அடிக்கும் இடத்தில ஈ க்கு வேலை கிடையாது. போனால் தீயில் அல்லது சம்மட்டி அடி வாங்க மிக மிக அதிக வாய்ப்பு இருக்கிறது.


முக்கிய வீடியோ