உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு ஒப்புதல் பெற்ற பின் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

மத்திய அரசு ஒப்புதல் பெற்ற பின் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்: ''மத்திய அரசு ஒப்புதலுக்கு பின் ராமேஸ்வரம் - இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்கு வரத்து துவக்கப்படும்,'' என, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.நேற்று ராமேஸ்வரத்தில் புதிய துறைமுக அலுவலகத்தை அமைச்சர் வேலு திறந்து வைத்து, ராமேஸ்வரத்தில் பிரதமரின் ஆயுஷ்மான் திட்டத்தில், 20 கோடி ரூபாயில் கட்டப்படும் மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் தண்ணீர்ஊற்று, பாம்பன், தேவிபட்டினத்திற்கு கடல்வழி படகு சுற்றுலா செல்ல ராமேஸ்வரத்தில், 7 கோடி ரூபாயில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது .மேலும், 118 கோடிரூபாயில் ராமேஸ்வரம் முதல் இலங்கை தலைமன்னார் வரை, மீண்டும் கப்பல் போக்குவரத்து துவக்க மத்திய அரசின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு அனுமதி வழங்கியதும் கப்பல் போக்குவரத்து துவக்கப்படும். ராமேஸ்வரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 150 கோடி ரூபாயில் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவக்கப்படும். இப்பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜூலை 31, 2025 07:35

மாநில நிதி ஆதாரம் குறைவு. மாநிலத்திற்கு நிலப்பகுதி மட்டும் தான் பொருந்தும். ஆகாயம், கடல் உரிமை கிடையாது? பூம்புகார் கப்பல், தமிழ் நாடு பொருள் போக்குவரத்து, தமிழ்நாடு உப்பு, தமிழ் நாடு ஸ்டீல்... போன்ற ஏராளமான நிறுவனங்கள் இழப்பினால் தற்போது இல்லை? தமிழ்நாடு போக்கு வரத்து, மின்வாரியம், ஓட்டல் தமிழ்நாடு இழப்பில் நடை பெறுகிறது. கப்பல் போக்கு வரத்து ஒப்புதல் கூடாது. கண்காணிப்பு கடினம். மாநில பணிகள் வேறு. மாநிலம் முழுவதும் சாலைகள், ஓடைகள், சீர் கெட்டு கிடக்கிறது. ஆறு, குளம் குட்டைகள் பாழ். இவைகளை மத்திய அரசு எடுத்து கொண்டு, கப்பம் அனுமதி தரலாம். திராவிடம் திட்டம் தேச பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்து உழைக்காது. அனுமதி கூடாது.


krishna
ஜூலை 31, 2025 02:32

VELU SIR UNGA BASHAYIL ONDRIYA ARASIN OPPUDHAL EDHARKKU.ULAGIN OPPATRA AATCHI NAATHAM PIDITHA DRAVIDA MODEL VIDIYAA AATCHI. SUMMA KAPPAL VIDUNGA ILANGAIKKU.ONDRIYA ARASU PRACHNAI SEIDHAAL ADHAAN NEEDHIBADHIGAL ANI IRUKKE DRAVIDA MODEL SEIDHADHU SARI ENA SOLLA.


புதிய வீடியோ