உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளா கடலில் கப்பல் விபத்து: தமிழகத்தில் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு

கேரளா கடலில் கப்பல் விபத்து: தமிழகத்தில் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கேரள மாநில கடற்கரையில், 'எல்சா - 3' கப்பல் சமீபத்தில் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த எரிபொருள், பிளாஸ்டிக் துகள், ஆபத்தான பொருட்களை கொண்ட 'கன்டெய்னர்'கள் கடலில் விழுந்தன. அவை, கன்னியாகுமரி கடற்கரையிலும் கரை ஒதுங்கி வருகின்றன. இதனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், நேற்று உயரதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில், முதல்வர் கூறியுள்ளதாவது:பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் கன்டெய்னர்கள், வானிலை சூழலுக்கு ஏற்ப நகரும் திசை, கரை ஒதுங்க கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணித்து, பிளாஸ்டிக் துகளை அகற்ற வேண்டும். பாதுகாப்பு தொடர்பாக மக்களும், மீனவர்களும் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை கலெக்டர்கள் வழங்க வேண்டும்.இந்நிகழ்வால், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த குறுகிய மற்றும் நீண்டகால ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மீன்வள துறை வாயிலாக மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள் மீதான தாக்கத்தை கண்டறிய ஆய்வை துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த சூழ்நிலையை தொடர்ந்து கவனமாக கண்காணிக்க வேண்டும்.தற்போதைய நிலவரப்படி, எவ்வித ஆபத்தான பொருட்களும் தமிழக கடற்கரையில் ஒதுங்கவில்லை. பொது மக்கள் மற்றும் மீனவர்கள், பிளாஸ்டிக் துகள், பெட்டகங்கள், சந்தேகத்திற்கு உரிய பொருட்கள் கடலிலோ அல்லது கடற்கரையிலோ கண்டறியப்பட்டால், உடனே மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும். மக்களின் உயிர், வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
மே 31, 2025 09:57

ஒதுங்குன கண்டெய்னரில் ஒரு கண்டய்னர் காணாம போயிருக்குமே.


Kasimani Baskaran
மே 31, 2025 06:50

சென்னையில் நட்ட நடுச்செண்ட்டரில் கூவம் ஓடுவது பற்றி கவலையே இல்லை - ஆனால் கேரளாவில் கண்டைனர் விபத்து என்றவுடன் பதறுகிறார் முதல்வர்..


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 31, 2025 10:55

ஒரு வேளை திமுக உறுப்பினர்கள் சொந்தமான பொருட்கள் இந்த கப்பலில் இருந்திருக்கலாம். அதனுடைய பாதிப்பு எவ்வளவு என்று கணக்கிட அரசு செலவில் ஆய்வு செய்யலாம். யாருக்கு தெரியும்.


திருட்டு திராவிடன்
மே 31, 2025 06:24

அது என்னமோ தெரியவில்லை, நம்முடைய முதல்வர் ஏதாவது அறிக்கை விட்டாலோ ஆலோசனை நடத்தினாலோ இதெல்லாம் உண்மையா கோபால் என்று நினைக்கத் தோன்றுகிறது.


rajan_subramanian manian
மே 31, 2025 06:12

அப்படியே நைஜீரியாவில் வெள்ளம் ஏற்பட்டது பற்றி தமிழகத்துக்கு எதாவது பாதிப்பா என்று கள ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பலாமே


மீனவ நண்பன்
மே 31, 2025 05:20

இதற்காக ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள செய்யலாமே


Kasimani Baskaran
மே 31, 2025 06:48

ஏன் ஆப்பிரிக்காவுக்கு பயணித்து அங்குள்ளது போல ஒரு உள் கட்டமைப்பை ஏற்படுத்தக்கூடாதா? அயலக அணிகள் அதைத்தான் செய்கிறார்கள் என்பது கூட தெரியாதா?


சமீபத்திய செய்தி