உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவனை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டிய இன்னொரு சிறுவன் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

சிறுவனை விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டிய இன்னொரு சிறுவன் - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிறுவனை இன்னொரு சிறுவன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டும் காட்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலியில், 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுவனுக்கும் இடையே கடந்த தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக 17 வயது சிறுவர் 16 வயது சிறுவனை நேற்று இரவு விரட்டி விரட்டி அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளார்,இந்த சம்பவத்தின் போது சாலை நடந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை கேடயமாக வைத்து 16 வயது சிறுவன் தப்பிச் சென்ற நிலையில் 17 வயது சிறுவன் அவருடைய நண்பர்கள் சமாதானப்படுத்தி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்இந்த சம்பவத்தின் போது மூதாட்டி லட்சுமி கீழே விழுந்ததில் கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் 16 வயது சிறுவர் மற்றும் மூதாட்டி லட்சுமி இருவரும் அளித்த புகாரியின் அடிப்படையில் திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர் இந்த சம்பவம் தொடர்பான சிசிடி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Smba
நவ 16, 2024 04:43

கூர்நேக்கு கூறத நேக்கு எல்லாம் No யூஸ்


M S RAGHUNATHAN
நவ 15, 2024 20:26

இது தான்திராவிட மாடல். கல்வி அமைச்சர் area. சும்மா விடமாட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை