உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!

அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஸ்ருதி(27) என்ற உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9zwzpnco&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Anantharaman Srinivasan
ஜூலை 20, 2025 13:50

ஏற்கனவே தகராறில் கணவன் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படியிருக்கையில் மேற்கொண்டு பாதுகாப்பு கொடுத்து உயிரை காப்பாற்ற நிர்வாகம் தவறியது ஏன்..?


ديفيد رافائيل
ஜூலை 20, 2025 14:55

மருத்துவமனையை பொறுத்த வரை சாதாரண மனிதனுக்கு பாதுகாப்பு தர மாட்டாங்க. இது தான் நியதி.


T.sthivinayagam
ஜூலை 20, 2025 13:29

பீகார் அரசு மருத்துவமனையில் கொலை நடந்து இரண்டு நாள் கூட ஆகவில்லை அடுத்து தமிழகத்தில் எல்லாத்துக்கும் கிரக நிலையே காரணம்


எஸ் எஸ்
ஜூலை 20, 2025 11:17

அரசு மருத்துவமணிகளில் கேட்பார் இல்லாமல் மத பிரச்சாரம்தான் நடந்து வந்தது. இப்போது கொலை... கொடுமை


Kjp
ஜூலை 20, 2025 11:15

கொலை கொலை இது நித்தமும் நடக்கிறது இந்த ஆட்சியில் இதற்கு விடிவே கிடையாதா.


Sudha
ஜூலை 20, 2025 10:59

என்னையா பேரு? எந்த ஊர் பேரு? கஸ்மாலம்


sridhar
ஜூலை 20, 2025 10:52

இன்னும் என்ன நடக்கணும் மக்களே, போங்க போய் ரெண்டாயிரம் வாங்கிட்டு அதுங்களுக்கே போடுங்க .


Ramalingam Shanmugam
ஜூலை 20, 2025 10:31

அப்பா ஆட்சி அருமை


பேசும் தமிழன்
ஜூலை 20, 2025 10:14

ஸ்டாலின் தான் வாராறு.....விடியல் தர போறாரு ???


ராஜ்
ஜூலை 20, 2025 09:58

விடியல் ஆட்சி சூப்பர்


sekar ng
ஜூலை 20, 2025 09:38

தாக்கி மருத்துவமனையில் உள்ள நோயாளியை FIR பதிவு செய்யாமல் உள் நோயாளியாக காவல் துறை என்ன செய்தது?


கல்யாணராமன்
ஜூலை 20, 2025 10:35

என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?


கல்யாணராமன்
ஜூலை 20, 2025 10:38

இதுதான் அவர்களின் வழக்கம் அனுபவம் உள்ளது.