உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புகையிலை பொருள் விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல்

புகையிலை பொருள் விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவ முறைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரையாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: புகையிலை, போதை பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட, 391 வகையான புகையிலை சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த டிச., 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில், 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், 37.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீசார் நடத்திய ஆய்வில், 1,400 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.இதற்கு முன், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதன்முறை 5,000 ரூபாய்; இரண்டாவது முறை 10,000 ரூபாய்; மூன்றாவது முறை 25,000 ரூபாய் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடைமுறை எடுக்கப்பட்டது.தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்றால், மருந்தகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

HARIPRASATH G
ஜன 04, 2024 20:17

அதிக காசு லாபம் பார்க்கலாம் என புகையிலை பொருட்களை விற்க நிறைய கடைக்காரர்கள் தயாராக தான் இருப்பார்கள். புகையிலை பொருட்களை சப்ளை செய்யும் கும்பலை பிடித்தால் மட்டுமே புகையிலையை ஒழிக்க முடியும்.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:47

நல்லா பாருங்க மக்களே, எல்லாம் லிஸ்ட் எடுத்து பாத்தீங்கன்னா, பாதி பேர் BJ-Party சேர்ந்தவானா தான் இருப்பானுங்க. எங்கிருந்துடா வர்றீங்க...


Ram pollachi
ஜன 04, 2024 13:44

புகையிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு என்ன தண்டனை சொல்லுங்க சார்... பாக்கெட் புகையிலை கிடைக்காத நிலையில் மூக்கு பொடியை வாயில் வைத்துக் கொண்டு போகும் நிலை வந்துவிட்டது...


அப்புசாமி
ஜன 04, 2024 11:27

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சிகரட் எதுல பண்றாங்கோன்னு தெரீல ஹைன். எல்லாம் கழக சகவாச தோஷம் தான்.


அப்புசாமி
ஜன 04, 2024 11:25

விம்கோ நகரில் இருக்கும் ஐ.டி.சி சிகரட் தொழிற்சாலையை இழுத்து மூடவும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 04, 2024 11:00

எல்லாமே சொல்லுங்க. ஆனா எதையுமே செய்யாதீங்க..


அப்புசாமி
ஜன 04, 2024 10:17

புகையிலையே தேவை இல்லை... கஞ்சா கருமாந்தரம் வந்தாச்சு.. கடைக்கு சீல் வெச்சா ஆன்லைன்ல வாங்கிடுவோம்ல..


Kannan Chandran
ஜன 04, 2024 09:47

அப்படியென்றால், புகையிலை தொழிற்சாலை நடத்தும் லெக்தாதா-வைகோ -வை முதலில் கைது செய்ய வேண்டும்.


duruvasar
ஜன 04, 2024 09:43

சைக்கிள் பாபுவின் கஞ்சா ஒழிப்பு போல் புகையிலை ஒழிப்பு 1.01 என ஆரம்பித்து 1.2024 வரை போகலாம். ஒன்றும் குடி மூழ்கிவிடாது.


TAMILKUMARAN
ஜன 04, 2024 09:31

எங்க வீட்டு எதிர்ல ஜம்முனு வியாபாரம் ஆகுது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி