உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? ஐகோர்ட் மதுரை கிளை சரமாரி கேள்வி

மதுரை: 'தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே' என ஐகோர்ட் மதுரைக்கிளை சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.அரசு சட்டக்கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (செப்.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் விகிதம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* தமிழகத்தில் 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் இல்லை; பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. * தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் மூடி விடலாமே? எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன. அதில் எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர்?* புதிய சட்டக் கல்லூரிகளை திறந்தால் போதுமா? தேவையான பேராசிரியர்களை நியமிக்க வேண்டாமா? * அரசு சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயர்கல்வித் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆதிகுடி கொற்கை
செப் 21, 2024 05:47

தாராளமாக மூடி விடலாம். இருந்து மக்களுக்கு ஒன்றும் உபயோகம் இல்லை!!!


T.sthivinayagam
செப் 20, 2024 21:42

நாலு கோடி வழக்குகள நிலூவையில் உள்ளதாக சொல்கிறார்கள் இது போன்ற வழக்குகளை யார் எடுத்து செல்வது யார் முன்னிலை படுத்துவது மக்களின் சந்தேக கேள்வி...


Ramesh Sargam
செப் 20, 2024 20:50

பல நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை. வழக்குகள் லட்சக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன. நீதிமன்றங்களை மூடிவிடலாமா...??


M Ramachandran
செப் 20, 2024 19:25

நல்லது தான்.தமிழக சட்ட கல்லூரிகள் ரவுடிகளையும் கட்ட பஞ்சாயத்து செய்பவர்களையும் தான் தற்போது உற்பத்தி செய்கிறது. நகரின் பல இடங்களில் பஸ் ரயில் தல ரூட்டுக்கள் தான் சட்ட கல்லூரிகளில் பெரும்பாலும் சேருது


rama adhavan
செப் 20, 2024 20:10

பொதுப் பிரிவில் 31% இல் வருபவர்கள், குறிப்பாக முன்னேறிய சமூகம் என அழியாத முத்திரை குத்தப்பட்டு, முதன்மை மதிப்பெண் பெற்று படிப்பவர்கள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. கவனித்தீர்களா?


Kanns
செப் 20, 2024 18:44

SC or Higher Courts Must Concentrate on More Pressing Problems -Unemployment, Poverty etc


Ram pollachi
செப் 20, 2024 17:25

பள்ளி வளாகத்தில் கல்லூரி, கல்லூரி வளாகத்தில் பல்கலைகழகம் நடத்துவது. பந்தைய சாலையில் இருந்து மருதமலை அடிவாரத்துக்கு கொண்டு போய் சேர்ப்பதற்குள் பட்ட பாடு... சீட்டு வாங்க தட்சணை கொடுக்க வேண்டும், வந்து என்ன பயன் ஆக உங்களுக்கு ஒரு கும்புடு... முதல்வர் சீட்டுக்கு ஒரு கும்புடு ஆளை விடுங்கள்...


அப்பாவி
செப் 20, 2024 16:56

கோர்ட்களில் தேங்கியிருக்கிற கேஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் கோர்ட்களையே மூடிரலாம்னு தோணுது யுவர் ஆனர்.


rama adhavan
செப் 20, 2024 20:21

பெரும்பாலோரது கருத்து. எனக்கு தெரிந்த ஒரு பணி சம்பந்தமான வழக்கில் 4 ஊழியர் நிர்வாகத்தால் 1999 இல் பணி நீக்கம். இதை எதிர்த்த வழக்கு 2000இல் பதிவு. உயர் நீதி மன்றத்தில் 2010இல் மறு விசாரணைக்கு உத்திரவு. இதை எதிர்த்த நிர்வாகத்தின் மனு 2024 ஜூனில் பெஞ்சில் தள்ளுபடி. அதாவது மறு விசாரணை. மனுதாரர்கள் இப்பவே 65 வயது. மறுவிசாரணை நடத்தி முடிவு வந்து, கோர்ட்க்கு போய் நீதி வர இன்னமும் 30 வருடங்கள். இது யாருக்குப் பயன்?


sundaran manogaran
செப் 20, 2024 16:22

காலிப்பணியிடங்களை நிரப்பத்தான் விரும்புகிறோம்.ஆனால் எங்க ரேட்டுக்கு யாரும் வரமாட்டேங்கராங்களே...என்ன செய்ய ஒரு ரேட் ஃபிக்ஸ் பண்ணி கொடுத்தால் உடனடியாக நியமனம் பண்ணி வசூலை முடிச்சுக்குவோம்.


என்றும் இந்தியன்
செப் 20, 2024 16:20

10000% சரியான பரிந்துரை. அதை சீக்கிரம் இந்த வருடமே செய்து விடுங்கள். ஏன்???1 கோர்ட் வளாகத்தில் சென்று பாருங்கள். வழக்குகள் கிடைக்காமல் வக்கீல்கள் பிச்சைக்காரர்கள் போல திரிகின்றார்கள். 2 கபில் சைபால் போன்றவர்கள் ஒரு கோர்ட் appearance ரூ.1.5 கோடி வாங்குகின்றார்கள். யாருக்காக வாதாடுகின்றார்கள் தீவிரவாதிகளுக்காக இந்தியாவிற்கு உபயோகமில்லாத அரசியல்வியாதிகளுக்காக 3 அரசியல்வியாதிகள் பணக்காரர்கள் என்றால் வழக்கு இழு இழு இழு இழு இழுத்துக்கொண்டே போகும் ஒரு தீர்வு கூட சொல்லாமலே உடனுக்குடன் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்கப்படும்???இதற்கு எதற்கு சட்டக்கல்லூரி???அதில் படிப்பு என்று உளற??? பொது சட்டக்கல்லூரி மற்றும் அநீதிமன்றங்களையும் சேர்த்து மூடி விட்டு இன்னும் 10 வருடத்திற்கு ஒரே ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் "தவறு கண்டேன் சுட்டேன் சொத்து இந்திய கருவூலத்திற்கு மாற்றம்"???10 வருடம் கழித்து நீதிமன்றம் சட்டக்கல்லூரி திறப்பதா என்று முடிவெடுக்கலாம்


ஆரூர் ரங்
செப் 20, 2024 16:12

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் பத்து மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் இல் நியமிக்கப்படவில்லை என்ற செய்தி வந்தது. ஆக கல்வியில் மிகவும் முன்னேறிய மாநிலம் என்பது உறுதியாகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை