மேலும் செய்திகள்
தட்சிணாமூர்த்தி கோவிலில் காஞ்சி மடாதிபதி தரிசனம்
12-Sep-2025
நாட்டை பாதுகாப்பதற்கு, இறைவன் அருள் தேவை. அவன் அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற வேண்டும். அதற்கு, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு, அனைத்து கவசத்தையும் படித்து, பயன்பெற வேண்டும். என காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கூறினார்.:ஆன்மிகத்தை தமிழகம் முழுதும் பரப்ப, இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். ஜனா கர்சனம், தனா கர்சனம் என்று, ஆதி சங்கரர் அந்த காலத்திலே எந்திரங்களை ஸ்தாபித்தார். அது போன்று, தர்மத்தின் மீது ஆவாஹர்சனம் உருவாக்ககூடிய நல்லதொரு முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதுபோன்ற நிகழ்ச்சியை மாவட்டந்தோறும் நடத்தி, ஒவ்வொரு கிராமத்தோடும், நம் ஆன்மிகத்தை, நாம் இணைத்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்க, முயற்சிக்க வேண்டும். அதுபோன்ற எண்ணத்தை இந்த வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு உருவாக்கி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், வேத பண்டிதர்கள், அவரது குடும்பத்தில் நடக்கும் திருமணங்களுக்கு, அரசு மூலமாக, உதவும் ஒரு திட்டம் உள்ளது. பல யுகங்களாக ஹிந்து சனாதன தர்மம் வந்து கொண்டிருக்கிறது . பிறப்பு எப்போது தொடங்கியதோ, அதிலிருந்து ஹிந்து சமயம் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
12-Sep-2025