உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவுடன் பழக ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி கேட்கணுமா: எ.வ.வேலு கேள்வி

திருமாவுடன் பழக ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி கேட்கணுமா: எ.வ.வேலு கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''திருமாவளவனுடன் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்,'' என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 'கூட்டணி கட்சிகள் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததால், வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஜனநாயக ரீதியில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் மேடையில் அவ்வாறு பேசினேன்' என்று வி.சி.க.,வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சர் வேலு, திருமாவளவனிடம் பேசி அழுத்தம் கொடுத்தார் என்றும் கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yqmpiruo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தி.மு.க., அழுத்தம் கொடுக்கவில்லை. என்ன ஆதாரம் இருக்கிறது? 2001ல் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வரும் போது, அவருடைய பக்கத்து சீட்டு தான்.அப்போது முதல் தற்போது வரை நானும், அவரும் நல்ல நண்பர்கள். எதிர்க்கட்சி கூட்டணிக்கு போன போதும் கூட திருமாவளவன் என்னுடன் சகஜமாக பேசும் நல்ல சகோதரர், நட்புக்குரியவர். அதனால், என்னிடம் வந்து அவர் பேசும் போது நான் அழுத்தம் கொடுக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது. திருமாவளவன் ஒரு நல்ல அறிவாளி, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அரசியலைப் பற்றி புரிதல் கொண்டவர். ஒரு கட்சியின் தலைவரான அவர் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர். எந்த அழுத்தமும் நாங்கள் கொடுக்கவில்லை. திருமாவிடம் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வைகுண்டேஸ்வரன் V
டிச 16, 2024 21:31

திருமா வின் அரசியல் வாழ்வில் ஒரு பெரிய கரும்புள்ளி தான் இந்த ஆதவ் விவகாரம். இத்தனை வருடங்கள் அவர் சேர்த்து வைத்திருந்த புகழ், மரியாதை எல்லாவற்றையும் இந்த விவகாரம் காலி பண்ணிவிட்டது


வைகுண்டேஸ்வரன் V
டிச 16, 2024 21:11

நான் இந்த ஆட்டத்துக்கு வரலை ன்னு ஆ அர்ஜுனா எப்பவோ விலகி ஓடியே போயிட்டார். இவங்க ஏன் யாருமே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்தறாங்க??? செத்த பாம்பை அடிச்சுகிட்டிருப்பது ஏன்?


Natarajan Ramanathan
டிச 16, 2024 18:37

அதேபோல கனியிடம் பழகுவதற்கு ராசாவின் அனுமதியும் தேவை இல்லை.


Edwin Jebaraj T ,Tenkasi
டிச 16, 2024 18:03

நீர் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை .அதற்கு நீங்கள் கட்டிய 16 கோடி பாலம் ஒன்றே சாட்சி. தமிழ் ஹிந்தி என்று சொல்லி மக்களை ரொம்ப நாள் கூமுட்டைகளாக வைத்திருக்க முடியாது.


Kumar Kumzi
டிச 16, 2024 16:39

இவனுக்கு பணம் பறிக்கும் ஆதவ் மரம் போயிருச்சே என்ற கவலை தான் வேற ஒன்றுமில்லை


Muthu Kumaran
டிச 16, 2024 15:17

அறிவாளிக்கு அறிவாலயத்தில் என்ன வேலை . கொத்தடிமைகள் தானே அங்கு செல்ல வேண்டும்


Muthu Kumaran
டிச 16, 2024 15:14

பிளாஸ்டிக் chair போட அனுமதி வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 16, 2024 14:11

திருமாவிடம் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்?


Madras Madra
டிச 16, 2024 14:05

புதிதாக நீங்க கட்டிய பாலம் அடித்து கொண்டு போனது ஏன் என்ற கேள்விக்கு கூட இவ்ளோ பொறுப்பா பதில் சொல்லலியே நீங்க ?


Shankar
டிச 16, 2024 14:05

திருமாவளவன் பேசாம தன்னோட கட்சியை கலைச்சிட்டு திமுகவோடு இணைஞ்சிடலாம்.


புதிய வீடியோ