உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்துவதா; அண்ணாமலை ஆவேசம்

அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்துவதா; அண்ணாமலை ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே நாட்களைக் கடத்தி விட்டு, தற்போது, ஆட்சி முடியும் தருவாயில், முகாம் நடத்துகிறோம், குறை தீர்க்கிறோம் என்று, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் தமிழக அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்தது என்பதற்கு, இப்போது அவசர அவசரமாக ஆங்காங்கே நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி. அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? ஏற்கனவே திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை, நாங்கள் கண்டித்த உடன், இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இவற்றை எதையும் கண்டுகொள்ளாமல், மாதம்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார். ஏற்கனவே முகாம்களில் பெற்ற மனுக்களை, வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு எதற்கு இந்த வெட்டி விளம்பரம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

T.sthivinayagam
அக் 14, 2025 21:32

இதுவும் மேலிடம் கொடுத்த புது அஸ்ன்மென்ட் ஐயா ஜீ


Raju
அக் 14, 2025 21:23

சேவைப்பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்னு தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. இதோ 5 ஆண்டு கால ஆட்சி முடிய போகிறது. ஆனால் இன்றுவரை அதை நிறைவேற்ற வில்லை, மற்ற மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தை நிறைவேற்றி இருந்தால் 30 நாட்களுக்குள் அரசு அதிகாரிகள் பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை. தினமலரில் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களின் செய்தி வராத நாளே இல்லை. இதோ இப்ப தேர்தலை முன்னிட்டு இந்த மாதிரி வித விதமாக பெயர்களை வைத்து மாணவர்களின் படிப்பினை கெடுத்து, அரசு இயந்திரத்தை போட்டு அலைகழிக்கும் அவலமும் நடக்காது.


கடல் நண்டு
அக் 14, 2025 20:51

படிப்பறிவில்லா , திருட்டு குணம் கொண்ட திராவிட கும்பல்களுக்கு கல்வி அல்லது பள்ளிகளைப்பற்றி என்ன கவலை..


Sivasankaran Kannan
அக் 14, 2025 20:08

உம்மை போன்ற அடிமை கூட்டம் கிடைத்த குடும்பம் அதிஷ்டம் நிறைந்தவர்கள்


vbs manian
அக் 14, 2025 20:05

பள்ளிகள் மீது கழக கரு மேக கூட்டங்கள்.


krishna
அக் 14, 2025 19:50

அநியாயத்தை கண்டிப்பவர்களை கிண்டல் பண்ணுவது தவறு.


spr
அக் 14, 2025 18:48

கரூர் மக்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம், இறந்தவர்களுக்கொரு அஞ்சலி அமைதி ஊர்வலம் என ஏதேனும் நடத்தியிருந்தால், பாராட்டலாம். இப்பொழுதுள்ள அரசியல் சூழலில் மத்திய தலைமை அனுமதியில்லாமல் திமுக உட்பட எவரையும் குறை சொல்ல முடியாது மாநிலத் தலைமைப் பொறுப்புமில்லை. துரதிர்ஷடவசமாக திரு அண்ணாமலை ஒரு எரி நட்சத்திரம் ஆகிவிட்டார். மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விஷயங்களில் கருத்து சொல்கிறார்


Manaimaran
அக் 14, 2025 18:27

நடப்பது நடந்துட்டு தான் இருக்கும் உம்மால கூப்பாடு போடத்தான் முடியும்


D.Ambujavalli
அக் 14, 2025 18:07

ஏற்கெனவே பள்ளிகள் மழைக்காலத்தில் மாணவர்கள் மீது எப்பொழுது இடிந்து விழுமோ என்று உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை ஒரு புறம். இப்போதுதான் காலாண்டு விடுமுறை முடிந்து பாடங்கள் தொடங்கலாம் என்றால், திடீர் விடுப்பு, முகாம், கூட்டம் என்று பள்ளிக் கல்வியை ஒரு வழி செய்துவிட்டால், பெற்றவர்கள் கடனோ உடனோ பெற்று இவர்களின் பள்ளிகளில் சேர்ப்பார்கள் கட்சி விளம்பரமும் ஆச்சு, பள்ளிகளுக்கு சேர்க்கையும் ஆச்சு என்ன ஒரு தந்திரம், திராவிட மாடல் ஆச்சே, சும்மாவா?


Priyan Vadanad
அக் 14, 2025 17:43

மலை ஆவேஷத்தில் கொந்தளித்து சிதறினால் வளமான நிலம் உருவாகுமல்லவா. ஏற்கெனெவே நொறுக்கப்பட்ட மலையை திரும்பவும் ஒன்றாக்குகிறார்களோ. அடிக்கடி விளம்பரங்களில் வருகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை