உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கொசு ஒழிப்பு ஊழியரை ஈடுபடுத்துவதா?

வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கொசு ஒழிப்பு ஊழியரை ஈடுபடுத்துவதா?

சென்னை: 'கொசு ஒழிப்பு பணியாளர்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி, பலிகடா ஆக்குவதை கைவிட வேண்டும்' என, கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து உள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் செயலர் சாந்தி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க செயலர் ரவீந்திரநாத் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால், போதிய அளவில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், கொசு ஒழிப்பு பணிக்கு புதிய பணியாளர்களை நியமிக்காததும், ஏராளமான பணியாளர்களை நீக்கம் செய்வதும், அவர்களுக்கு தொடர்பில்லாத வேறு பணிகளை வழங்குவதும் தொடர்ந்து வருகிறது. தற்போது, வாக்காளர் பட்டியல் திருத்த பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் எஜிப்டி' வகை கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூன்று பேருக்கு மேல் டெங்கு பாதிக்கப்பட்டால், அந்த கள பணியாளருக்கு, 200 ரூபாய் அபராதம் மற்றும் ஒருநாள் கூலி வழங்கப்படாது போன்ற நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. இவற்றை உடனடியாக கைவிட வேண்டும். மாநிலத்திற்கு, 80,000 கொசு ஒழிப்பு பணியாளர்கள் இருக்க வேண்டிய நிலையில், 23,000 பேர் தான் பணியில் இருக்கின்றனர். அவர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை, உள்ளாட்சி அமைப்புகள் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை