கட்டுப்படுத்த வேண்டியவர்கள் கடிதம் எழுதி கடமையை தவிர்ப்பதா?
கூடுதல் பணிச்சுமையால் அரசு மருத்துவர்கள், நர்சுகளில் சிலர் மக்களிடம் சரியாக நடந்து கொள்வது இல்லை. அரசு மருத்துவமனைகளில் துணை காவல் நிலையம் அமைத்து, வருவோரை சோதனை செய்வது நல்லதான். தமிழகத்தின் எல்லா இடங்களிலும் குறிப்பாக, பள்ளி, கல்லுாரி அருகே போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. ஆனால், காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு, 'போதைப் பொருட்களை தடுக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. கடிதம் எழுதி கடமையை தவிர்க்கலாமா?தி.மு.க., ஆட்சியில் ஓட்டு அரசியலை குறி வைத்தே எல்லாவற்றையும் செய்கின்றனர். பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் என்ற நிலை இருக்கும் வரை, மக்களை பற்றி அரசு கவலைப்படப் போவதில்லை. அரசு விழாவில், கட்சி சின்னம் உடைய டீ - ஷர்ட் உடன் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். அது கடும் கண்டனத்துக்குரியது. சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்