வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முருகானந்தம் சொல்வது முற்றிலும் உண்மை. ஆமாம் திருவாளர் விஜய் எதற்கு திடீரென்று அரசியலில் நுழைந்தார் ? அரசியலில் நுழைவதற்கு முன்பு தனது கொள்கைகள் இவை இவை என்று என்னிக்காவது சொல்லியிருக்காரா ??.இல்லை அரசியலில் இவர் தான் எனது தலைவர் என்றாவது சொல்லி இருக்கிறாரா ?? சரிங்க அதுவும் வேண்டாம் எந்த எந்த விஷயங்கள் எனக்கு தமிழக அல்லது இந்திய அரசியலில் பிடிக்கவில்லை அதை செய்வது தப்பு செய்பவர்களை எதிர்க்கிறேன் என்று சொல்லி உள்ளாரா ?? ஏழை எளிய மக்கள் இன்னின்ன விஷயங்களில் அரசின் செயல்பாடுகளால் அவதிப்படுகிறார்கள் . எனவே அதற்கு மாற்று வழியை என்னால் செய்யமுடியும் என்றாவது சொல்லி இருக்கிறாரா ?? எந்தவித கொள்கையையும் பின்பற்றாத ஒருவர் திடீரென்று நான் கட்சி ஆரம்பிக்கிறேன் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பணியாற்ற எனக்கு பதவி கிடைக்க உங்களது ஓட்டுக்களை எனது கட்சிக்கு போட்டு என்னை தேர்ந்தெடுங்கள் என்று எந்த அடிப்படையில் கேட்கிறார் ???? . இந்த கோரிக்கையை விட அபத்தமானது இந்த உலகில் ஏதும் உண்டா .?? சரி, சரி , ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் ஜெயித்தால் முதல்வர் ஆகலாம். ஆனாலும் தனது கொள்கையை வகுத்துக்கொள்ளாத , அதற்கான எந்த செயலும் மக்களுக்காக செய்திராத ஒரு மனிதன் தனது அடிப்படை தொழிலுக்கு பிரச்னை வந்ததால் பழி வாங்கும் நோக்கத்திற்காக அரசியலுக்கு வருவது திரு விஜய் அவர்களுக்கு எதிராகவே திரும்பும். சம நோக்கமும் கொள்கையும் கொண்ட தோழர்களோ நம்பிக்கையான தளபதிகளோ இல்லாத விஜய் எப்படி தனியாக ஜெயிப்பேன் என நினைக்கிராரோ அந்த இயேசு பெருமானுக்கே வெளிச்சம் எந்த சிறுபான்மையினரையும் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற நினைவில் கட்சி ஆரம்பித்த காரியவாதி தான் இந்த விஜய்