உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு

6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் பாறை சரிந்து ஆறு பேர் பலியான மேகா புளூ மெட்டல்ஸ் குவாரியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விதிமீறல்கள் நடந்தது கண்டறியப்பட்டதால் அதன் உரிமையாளர் மேகவர்ணத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.மல்லாக்கோட்டையைச் சேர்ந்த அழகப்பன் மகன் மேகவர்ணத்தின் மேகா புளூ மெட்டல்ஸ் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் மே 20 காலை 9:25 மணிக்கு பாறைக்கு வெடி வைக்க ஊழியர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் குழி தோண்டினர். அப்போது ஏற்பட்ட அதிர்வில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. 6 தொழிலாளர்கள் பலிஇப்பாறைக்கு அடியில் சிக்கி சம்பவயிடத்திலேயே ஓடைப்பட்டி முத்தையா மகன் முருகானந்தம் 49, மேலுார் அருகே இ.மலம்பட்டி மூக்கன் மகன் ஆறுமுகம் 65, ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி கணேசன் 43, மணல் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் ஒடிசாவை சேர்ந்த ஹர்ஜித் 28, ஆகியோர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மைக்கேல்ராஜ் 43, பலியானார்.

உரிமையாளர் தலைமறைவு

இவ்விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் குவாரி உரிமையாளர் மேகவர்ணம், அவரது தம்பி கமலதாசன், பொறுப்பாளர் கலையரசன் 32, சூப்பர்வைசர் ராஜ்குமார் 30, உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் கமலதாசன், கலையரசன், ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேகவர்ணம் உள்ளிட்டோரை தேடியும் வருகின்றனர்.குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்புஇக்குவாரியில் விசாரணை நடத்த கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். வருவாய் மற்றும் கனிம வளத்துறையினர் 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்தனர். ஆய்வு குழுவினர் கலெக்டரிடம் அளித்த ஆய்வறிக்கையின்படி 1.50 எக்டேரில் குவாரி நடத்த அனுமதி பெற்ற மேகா புளூ மெட்டல்ஸ் குவாரி நிறுவனம், அந்த லைசென்சை பயன்படுத்தி ஏற்கனவே 3.60 எக்டேரில் குவாரி செயல்பட லைசென்ஸ் பெற்று 2024 செப்., 25 ம் தேதியுடன் காலாவதியான குவாரியிலும் கற்களை எடுத்து அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. மேகா புளூமெட்டல்ஸ் பெயரில் இயங்கிய மற்றும் காலாவதியான 2 குவாரிகளின் லைசென்சையும் தற்காலிகமாக கலெக்டர் ஆஷா அஜித் ரத்து செய்தார்.

ரூ.91 கோடி அபராதம் விதிப்பு

தொடர் விசாரணையில் விதிமீறி காலாவதியான லைசென்ஸ் மூலம் குவாரியை நடத்தியது, நிர்ணயித்த அளவிற்கு மேல் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதற்காக மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்ணத்துக்கு சொந்தமான குவாரிகளில் ஓட்டு மொத்தமாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 324 க.மீ., கற்களை எடுத்ததற்காக ரூ.91 கோடியே 56 ஆயிரத்து 960 அபராதம் விதித்து தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை மேகா புளூ மெட்டல்ஸ் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டினர். மேலும் உத்தரவு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அபராத தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 18, 2025 20:09

கொள்ளையடித்தவன் குடும்பத்தின் தலையில் விழாமல் அதில் வேலை செய்தவன் தலையில் விழுந்ததால் அந்த கற்களுக்கு 91 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் .


Mani . V
ஜூன் 18, 2025 15:41

சரி, அந்த 91 கோடி ரூபாயை பலியான அறுவர் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுப்பீர்களா அல்லது நீங்கள் பங்கு போட்டுக் கொள்வீர்களா?


Varadarajan Nagarajan
ஜூன் 18, 2025 13:32

இந்த குவாரியை அவ்வப்போது ஆய்வுசெய்யாமல் முறைகேடுகள் நடக்கும்வரை எதுவுமே நடக்காததுபோல் இருந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்மீது என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அல்லது வழக்கம்போல் அவர்களுக்கு இடமாறுதல் மட்டுமா?


G Mahalingam
ஜூன் 18, 2025 12:50

300 கோடி லாபம் பார்த்து அதில் 91 கோடி அபராதம். இதில் 100 கோடி திமுக குடும்பத்திற்கு போய் விடும்.


Ramesh Sargam
ஜூன் 18, 2025 12:24

6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு. சபாஷ், அருமையான தீர்ப்பு. ஆறு பேர் பலியானதுக்கு தீர்ப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் சரக்கு குடித்து பலர் இறக்கிறார்கள். பல பெண்களின் தாலிகள் அறுபடுகின்றன. இதேபோன்று நமது நீதிமன்றம், தமிழக அரசை கண்டித்து தண்டனை அறிவிக்குமா? தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளும் மூடப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்குமா?


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 13:05

அவன் இந்த குவாரியை ஆரம்பித்து இதுவரை கொள்ளையடித்து சம்பாதித்த பணத்திற்கு மேல் இந்த அபராதத்தை கட்ட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திராவிட மாடல் அரசு அந்த அபராதத்தை வசூலிக்காது ஏனென்றால் இந்த மேகவர்ணம் என்பவர் திமுகவை சேர்ந்தவர் அந்த பகுதியில் திமுகவிற்கு தேர்தலில் ஏராளமான பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார் குறிப்பாக திமுக அமைச்சர்கள் யாதவ குல திலகங்களான கண்ணப்பன் மற்றும் அவரின் இளவல் பெரியகருப்பன் போன்றோருக்கு எனவே அவர்கள் இந்த மேகா என்ற குவாரியின் ஓனர் மேகவர்ணத்தை கைவிட மாட்டார்கள்.


Manaimaran
ஜூன் 18, 2025 11:43

நரைச்சாலும் வாங்க முடியாது


lana
ஜூன் 18, 2025 10:43

1.5 ஹெக்டேர் க்கு அனுமதி வாங்கி அதை விட அதிக இடங்களில் அளவில் கல் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எதுவுமே தெரியாமல் ஒரு கனிம வளத்துறை. இதெல்லாம் நம்புற மாதிரி இருக்கா. நம்பினால் தான் அதிகாரிகள் க்கு சோறு மற்றும் உயிர். இல்ல என்றால்.. உலகிலேயே கனிம வளங்களை கொள்ளை அடித்து உயிர் வாழும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே. கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள தடை. ஆந்திராவில் குவாரி அளவு drone மூலம் அளவீடு செய்ய படுகிறது. கணக்கில் வராமல் எடுப்பது கடினம். இங்கு தலை கீழாக உள்ளது. கேட்டால் கல் தோண்டி மண் தோண்டி வாழும் மூத்த குடி தமிழ் குடி ன்னு உருட்டு வேற


Keshavan.J
ஜூன் 18, 2025 10:56

கல் தோண்டி மண் தோண்டி வாழும் மூத்த குடி தமிழ் குடி ன்னு கூடவே டாஸ்மாக் குடி உருட்டு வேற


ponssasi
ஜூன் 18, 2025 10:36

காலாவதியான லைசென்ஸ் அதாவது சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை அந்த கிராம நிர்வாக அதிகாரி, காவல்துறை, வருவாய்த்துறை, கிராம பஞ்சாயத்து தலைவர் உதவியாளர், தலையாரி இன்னபிற சிலரின் ஒத்துழைப்போடு அமோகமாக நடந்துள்ளது. இந்த விபத்து நடக்கவில்லையெனில் இன்னும் சீரும் சிறப்புமாக தொழில் நடந்திருக்கும்.


Svs Yaadum oore
ஜூன் 18, 2025 09:49

தமிழ் நாடு முழுக்க குவாரி, ஜல்லி, ஆற்று மணல் செம்மண் கொள்ளை ...எந்த அரசு விதிமுறை சட்டம் எதுவும் பின்பற்றுவது கிடையாது. மொத்தமும் லஞ்ச ஊழல்....இந்த குவாரியில் ஆறு பேர் பலி ...இது போல் பலர் பலியான சம்பவங்கள்.. இந்த லட்சணத்தில் விடியல் ஆட்சியில் விவசாயத்தில் முன்னேற்றமாம்.. நாடு விரைவில் பாலைவனமாக மாறும் ....படு கேவலமான ஆட்சி நடக்குது ..


புதிய வீடியோ