உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சார் - பதிவாளர்கள் மீது வழக்கு

 சார் - பதிவாளர்கள் மீது வழக்கு

சென்னை: கள்ளக்குறிச்சியில், ஐந்து சார் - பதிவாளர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த, 4ல் மாநிலம் முழுதும், 46 சார் - பதிவாளர் அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 37.75 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இச்சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டை சார் - பதிவாளர் சந்திர சேகர், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு சார் - பதிவாளர் ஸ்ரீதர், திருப்பத்துார் மாவட்ட சார் - பதிவாளர் ராதிகா உட்பட, ஐந்து சார் பதிவாளர்கள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vaithi
ஜூன் 10, 2026 00:55

ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபித்த பாரதி கண்ட புதுமைப்பெண் ராதிகா அவர்களுக்கு வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி