உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சார் - பதிவாளர்கள் பேசுவது ஐ.ஜி., அலுவலகத்தில் கேட்கும்; பதிவுத்துறை நடவடிக்கை

சார் - பதிவாளர்கள் பேசுவது ஐ.ஜி., அலுவலகத்தில் கேட்கும்; பதிவுத்துறை நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, வீடியோ காட்சிகளாக மட்டுமின்றி, குரல் பதிவுகளையும் கண்காணிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.தமிழகத்தில், 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும், தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொது மக்களை, சார் - பதிவாளர்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் அருகிலிருக்கும், ஆவண எழுத்தர்கள் வாயிலாக வரும் ஆவணங்கள் மட்டுமே அலுவலர்களின் பரிசீலனைக்கு செல்கின்றன. இதை தவிர்த்து, பொது மக்கள் நேரடியாக பத்திரங்களை தாக்கல் செய்தால், அதில் ஏதேனும் குறைகளை சுட்டிக்காட்டி, திருப்பி அனுப்பப்படும். சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர்கள், பொது மக்கள் தவிர்த்து, வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சார் - பதிவாளர்களின் ஒத்துழைப்புடன், வெளியாட்கள் வந்து செல்வதாக புகார் கூறப்படுகிறது.எனவே, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக தலைமை அலுவலக அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்து, சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பேச்சுகளையும் கண்காணிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஐந்து இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை, நேரலை முறையில், டி.ஐ.ஜி., அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதுவரை காட்சிகளை மட்டும் காண முடிந்தது. தற்போது, குரல் பதிவுகளையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், பத்திரப்பதிவின் போது, பொது மக்களிடம், சார் - பதிவாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை, தலைமை அலுவலகத்தில் இருந்து, துல்லியமாக கேட்க முடியும். இதனால், பொது மக்கள் யார், தரகர் யார் என்பதை, எளிதாக கண்டுபிடிக்க முடியும். தரகர்கள் நடமாட்டத்தை அனுமதிக்கும், சார் - பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Muthukumaran
ஜூலை 27, 2025 15:45

மற்ற விபரங்களை வெளியே முடிந்து விடுவதால் அலுவலர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.


அப்பாவி
ஜூலை 24, 2025 20:26

மேலே இருக்கிறவங்க யோக்கியம்னு நெனப்பு. ஊழலே மேலிருந்து தான் கீழே இறங்குது.


Indhuindian
ஜூலை 24, 2025 10:49

முஷு பூசணிக்காயை சோத்துல மறைக்க பாக்கறீங்க. பத்திர பதிவு அலுவலகங்களில் உள்ளே தான் நம்பர் டூ பேசப்படுகிறதா. அதெல்லாம் அந்த காலத்துலே இருக்கலாம் இப்பெல்லாம் இடை தரகர்கள், பதிவு ஏஜெண்ட்கள்தான் இதெல்லாம் டீல் பண்றாங்க ஒவ்வொரு பத்திரமும் எந்த ஏஜென்ட் பதிவு செய்தது என்று தெரிந்துகொண்டு அன்று சாய்ந்தறமே ஆபீசுக்கு வெளியிலே டீலிங் முடிஞ்சிடும். சும்மா இதெல்லாம் பாவலா நாங்களும் நேர்மையாதான் இருக்குன்னு. இதெல்லாம் நம்பறமாதிரியா இருக்கு


Venkateswaran Rajaram
ஜூலை 24, 2025 10:44

பெரிய திருடர்கள் சிறிய திருடர்களை கண்காணிக்கிறார்களாம் ....மக்களாகிய நாம் எல்லாம் கோமாளிகள்


ramesh
ஜூலை 24, 2025 09:56

லஞ்சம் அனைத்து தனி தனி டாக்குமெண்ட் ரைட்டர் மூலம் நடக்கிறது . ஒவ்வொரு ரைட்டர் க்கும் தனி தனி கலரில் டாக்குமெண்ட் கட்டுவதற்குநூல் பயன் படுத்த படுகிறது . அந்த கலர் எண்ணிக்கைக்கு ஏற்ப தினமும் ரைட்டர் மூலமாக வசூலிக்க படுகிறது . இந்த நடைமுறை 15 ஆண்டுகளுக்கு மேலாக நடை முறையில் இருக்கிறது .பிறகு எப்படி லஞ்சத்தை தடுக்க முடியும் . பணம் வந்தால் தான் அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கொள்ளை அடிக்க முடியும் .எல்லாம் கண் துடைப்பூ .


Keerthi
ஜூலை 24, 2025 09:38

60 ஆண்டுகளாக நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள். வசூலிக்க சொல்வதே நீங்கதான் இதில் கேமரா வைத்து நடிக்கிறார்கள் உத்தமர்கள். ஆட்சி அதிகாரத்துடன் கொலை செய்து ரவுடித்தனம் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிடமும் பணக்காரர்களிடமும் பெட்டி பாம்பாக அடங்கும் காக்கிகள் ஏழை அப்பாவிகளிடம் வீரத்தை காட்டி கொலை செய்கிறது.


KRISHNAN R
ஜூலை 24, 2025 09:06

கேட்டு... கேட்டு....


சரவணன்
ஜூலை 24, 2025 09:00

எந்த பயனும் இல்லை. வசூல் பத்திர விற்பனையாளர் மூலமாக நடைபெறும்போது அலுவலகத்தை கண்காணித்து என்ன பயன்.


தர்மராஜா
ஜூலை 24, 2025 08:55

ஊழல்களை ஒரு வினாடி போதும். ஆனால் அந்த வினாடி உருவாகாமல் பாதுகாப்பது நமது ஆட்சியாளர்கள் தான். கலெக்டர் ஆஃபீஸ் வழியாகவே கனிமவள கடத்தல் லாரிகள் போகும் போது தனி மனிதர்கள் என்ன செய்வது? போலி பேராசிரியர்கள் பணியாற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.


karthik
ஜூலை 24, 2025 08:52

பங்கு சரியாக போறது இல்லை போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை