உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: எஸ்.ஐ., வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அவரது கணவரை தாக்கி, 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை அருகே மணப்பட்டியில் வசிப்பவர், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுமையாபானு, 42. இவரது கணவர் நாகசுந்தரம், 49. இவர்கள் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். நள்ளிரவில், இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சுமையாபானுவின் கணவர் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கி, அவரிடமிருந்த 10 சவரன் நகையை பறித்து தப்பினர். திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 07:55

சட்டம் ஒழுங்கை விடியல் செய்து விட்ட ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


Kasimani Baskaran
ஏப் 30, 2025 03:38

மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பதற்கு ஒரே கேள்வி... ஏன் சட்டம் ஒழுங்கு கேவலப்பட்டுப்போனதற்காக அந்தத்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் பதவி விழக்கூடாது? போலீஸ் வீட்டில் போலீசை தாக்கி கொள்ளை...


சமீபத்திய செய்தி