உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஸ்.ஐ.டி., குழு விசாரணை

பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஸ்.ஐ.டி., குழு விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவியிடம், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், டிசம்பர் 23ம் தேதி இரவு 7:45 மணியளவில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், நிறைய மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும், முக்கிய புள்ளியை காப்பாற்றும் முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் புக்ய சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா என, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இக்குழுவினர் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். அந்த இடம் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன்பின், பாதிக்கப்பட்ட மாணவி தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றனர். 'விசாரணைக்கு சம்மதமா; அதற்கு இந்த இடம் உகந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா' என்று கேட்டு, அவரின் ஒப்புதலுடன் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்து விபரங்களையும் மாணவி தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து, கைதான ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்த தகவல்களை, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, வாட்ஸாப் சாட்டிங், மொபைல் போனில் இருந்த தொடர்பு எண்கள், படம் மற்றும் வீடியோ என, அனைத்து விபரங்களையும் சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில், சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 03, 2025 13:50

இந்த மூன்று ஜபிஎஸ் அதிகாரிகளும் தமிழக அரசின் தமிழக காவல்துறை கீழ் பணிபுரிபவர்கள். இந்த விசாரணை எந்த அளவிற்கு நியாயமாக இருக்கும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Dharmavaan
ஜன 03, 2025 09:49

இது ஒன்றா விசாரணை அமைப்புகள் நீதியின் கேடுகெட்ட செயல்.. கண்துடைப்பு. நீதி திமுகவின் கைக்கூலியாக தப்பிக்க வழி செய்து கொடுக்கிறது


Dharmavaan
ஜன 03, 2025 09:46

சுடாலின் அரசின் கீழே உள்ள எந்த போலீஸ் அதிகாரியும் நேர்மையானவர்கள் இல்லை .இது வெறும் கண்துடைப்பு சிபிஐ விசாரணை வேண்டும்


பேசும் தமிழன்
ஜன 03, 2025 09:06

குற்றவாளி... குணசேகரன் சுட்டு கொல்லப்படவும் (இவர்கள் பாசையில் தப்பித்து ஓட பார்த்தான்) வாய்ப்புள்ளது .....சென்னை உயர்நீதிமன்றம் தான் ....யார் அந்த சார் என்று கண்டுபிடிக்கும் வரை...அவனை காப்பாற்ற வேண்டும்.


அப்பாவி
ஜன 03, 2025 08:50

அவமானம் தாங்காமல் ....


GMM
ஜன 03, 2025 08:31

தமிழக நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் பெரும் பகுதி, அதிக அளவில் ஆளும் கட்சி ஆதரவு உணர்வு தென்படுகிறது. மாநில ஆளும் கட்சி நிர்வாகம் கீழ் இல்லாத திமுக கூட்டணியில் இல்லாத வெளி மாநில, மத்திய அரசு அதிகாரிகள் குழு விசாரணையில் உடன் இருக்க வேண்டும். மத்திய பாதுகாப்பு கீழ் பாதிக்க பட்ட பெண் இருக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 03, 2025 08:03

திமுக நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தமிழக காவல்த்துறை இந்த வழக்கை விசாரித்தால் வழக்கு பாலூத்தி மூடப்படும். மாநகர காவல் ஆணையர் அரசிடம் அனுமதி வாங்காமலேயே வழக்கின் போக்கை மாற்றக்கூடிய பல தகவல்களை பொதுவெளியில் விட்டுவிட்டார். ஆகவே அவரையும் குற்றவாளியாக சேர்த்து அவரது எண்ணுக்கு வந்த அழைப்புக்கள், என்ன பேசினார்கள் போன்ற விபரங்களையும் சிபிஐ ஆராய வேண்டும். அதுவரை சம்பந்தப்பட்ட பெண் அவமானப்பட்டது தான் மிச்சம்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 03, 2025 09:33

சி பி ஐ கிட்ட கேஸைக் கொடுங்கள். ஒட்டு மொத்தமா ஊத்தி மூட இதுவே சிறந்த வழி. As of the end of 2023, the Central Bureau of Investigation CBI had 10,959 criminal cases pending in various courts. In this, 951 cases are more than 10 years old. Internet info.


Mani . V
ஜன 03, 2025 05:46

சார், அந்த சார் யாருன்னு சொன்னா, எனக்கு பாதுகாப்பில்லை.


அப்பாவி
ஜன 03, 2025 05:24

குற்றவாளியைப் புடிக்க துப்பில்லேன்னாலும் பாதிக்கப்பட்டவரிடம் ஆளாளுக்கு விசாரணை நடத்தி நாறடிச்சுருவாங்க.


D.Ambujavalli
ஜன 03, 2025 05:09

S . I . Team க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த vip சார்வாளின் விவரங்கள் எடிட் செய்யப்படக்கூட வாய்ப்புண்டு இந்த ஞானசேகரன் வாயைக் காசால் அடைப்பார்களோ, அன்றி ஒரேயடியாக ‘அடைப்பார்களோ’? எதுவுமே சாத்தியம்தான்


சமீபத்திய செய்தி