உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பு; ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு

கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பு; ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பில் இருந்த, போலீசார் ஆறு பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில், 2023 மே 13ல், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த, 14 பேர் இறந்தனர். அதேபோல, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய கும்பலைச் சேர்ந்த, 15 பேரை கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக, ஆறு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வந்தது. தற்போது, போலீசார் ஆறு பேரும், கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ரோசனை, அரகண்டநல்லுார் போலீஸ் நிலைய ஏட்டுகள் வேலு, செந்தில்குமார்; காவலர்களாக பணிபுரியும், காஞ்சனுார் முத்துகுமார்; விக்கிரவாண்டி குணசேகரன்; சத்தியமங்கலம் பிரபு; கோட்டாக்குப்பம் மதுவிலக்கு காவலர் அருணன் ஆகியோருக்கு, விழுப்புரம் டி.ஐ.ஜி., திஷா மிட்டல், கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

கட்டாய ஓய்வு குறித்து, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியதாவது:

கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட போலீசாருக்கு, தற்போது வாங்கும் சம்பளத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களால், ஓய்வு பெறும் வயது வரை பணியாற்ற முடியாது. 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டால், ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் எதுவும் கிடைக்காது. குற்றத்தின் தன்மை மற்றும் வயதை பொறுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N Srinivasan
மார் 24, 2025 14:30

சிபிஐ கேஸ் எடுத்து நடத்தும்போது இந்த முடிவு சரிதானா. பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்தநாள் பேப்பரில் ஒரு சின்ன செய்தி வருது. மக்கள் எல்லோரும் கண்டிப்பாக முட்டாள்தான் என்னையும் சேர்த்துதான் சொல்லுகிறேன்.


rama adhavan
மார் 24, 2025 13:20

கிழிஞ்சது போ, பென்ஷன் உடன் ஒய்வா? மாலை போட்டு வழி அனுப்பாதது தான் குறைச்சல். கள்ள சாராய கொலைகளுக்கு உடந்தை? ஜெயிலில் போடாமல், ஓய்வு, பென்ஷன். நல்ல தண்டனை. வேடிக்கை ஆக இல்லை?


visu
மார் 24, 2025 14:28

சைடு வருமானம் போச்சே மத்ததெல்லாம் சும்மா


தேவராஜன்
மார் 24, 2025 10:49

6 பேர் கட்டாய ஓய்வு மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு வேலை. திராவிஷ ரவுடிகளின் கொத்தடிமைகளே காவல் துறை. காவல் துறை சுதந்திரமாக நேர்மையாக செயல் பட்டால் இந்நேரம் ஆட்சியில் இருக்கும் பெரும்பான்மையோர் சிறைச்சாலையில் களி தின்று கொண்டு இருப்பர்.


Manalan
மார் 24, 2025 09:38

சாராய business partner ஆக மாறாம இருந்தா சரி.


RAJ
மார் 24, 2025 08:52

அதாவது 6 பேரு??? மட்டும்??? மீதி பேரு?? ஏறு அந்த சாரு??


Rajathi Rajan
மார் 24, 2025 13:22

அந்த சாரு,


raja
மார் 24, 2025 08:11

போலீசுக்கு சரி போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கு கட்சியில் பதவி கொடுத்து தொடர்பில் இருந்த திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்துக்கு என்ன தண்டனை என்று கேள் தமிழா....


Varadarajan Nagarajan
மார் 24, 2025 06:35

பல உயிர்களைபறித்த சட்டத்திற்கு புறம்பான இவ்வளவுபெரிய கிரிமினல் குற்றம்செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்பது சரியான & போதுமான தண்டனையா? நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகளுக்கு ஆயுள் தண்டனையை கொடுக்கவேண்டும் என குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக காவல்துறை வாதாடுகின்றது. பிறகு இவர்களுக்கு ஏன் குறைவான தண்டனை? நீதி என்பது ஒருதலைப்பட்சமாக இருக்கக்கூடாது.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மார் 24, 2025 06:29

இது போன்ற குற்றவாளிகளுடன் தொடர்பு உள்ள திராவிட விஷ தலைவர்கள் தண்டிக்கப்படுவதுடன் தேர்தலில் நிற்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.


D.Ambujavalli
மார் 24, 2025 06:11

இதுவரை ‘சாராய வரும்படியே’ அடுத்த சர்வீஸ் காலம் முழுவதற்கும் உள்ள அளவு சேர்த்திருப்பார்கள். நல்ல ஓய்வுஊதியம், ஒய்வு பலன்கள் இன்னும் என்ன வேண்டும்?


முக்கிய வீடியோ