உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சத்தம் இல்லாமல் வந்து சாதித்த சின்ன பட்ஜெட் படங்கள்: திருந்துவார்களா தயாரிப்பாளர்கள்?

சத்தம் இல்லாமல் வந்து சாதித்த சின்ன பட்ஜெட் படங்கள்: திருந்துவார்களா தயாரிப்பாளர்கள்?

சமீபகாலமாக தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் நல்ல மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது. சின்ன சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படும் கதையுள்ள படங்கள் நன்கு ஓடி, தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கின்றன. தமிழ் ரசிகர்களின் ரசிப்புத்தன்மையையும் நல்ல தரத்தை நோக்கி கொண்டு செல்கின்றன.முன்னுாறு கோடி, ஐநுாறு கோடி பட்ஜெட் படம் என்று பெருமை பேசி, பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் 100 கோடி 150 கோடிகளை கொட்டிக்கொடுத்து, அதையே ஒரு விளம்பரமாக்கி, படங்களை ஓட்டப் பார்ப்பது இயக்குனர்களின் வழக்கம். இந்த டெக்னிக் வேலை செய்யுமா செய்யாதா என்றெல்லாம் தெரியாத தயாரிப்பாளர்களின் தலையில் மிளகாய் அரைப்பார்கள் இதுபோன்ற இயக்குனர்கள்.ஆனால் இந்த ஆண்டு என்னவோ தமிழ் திரையுலகில் சில மாற்றங்களை சில இயக்குனர்கள் கொண்டு வந்துள்ளனர். வித்தியாசமான கதைக்களங்களில் சாதாரண நடிகர்களை வைத்து, செலவே இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

குப்பையில் சில மாணிக்கங்கள்

இந்த ஆண்டு கடந்துபோன 10 மாதங்களில் 180 படங்கள் வெளிவந்தன. இதில் ‛‛ஸ்டார்'' (ரூ.7 கோடி பட்ஜெட்) , ‛‛கருடன்'' (ரூ.20 கோடி), ‛‛மகாராஜா'' (ரூ.25 கோடி), ‛‛கொட்டுக்காளி'' (ரூ.5 கோடி). ‛‛வாழை'' (ரூ.5 கோடி). ‛‛லப்பர் பந்து'' (ரூ.7 கோடி), ‛‛மெய்யழகன்'' (ரூ.35 கோடி), ‛‛பிளாக்'' (ரூ.15 கோடி) ஆகிய படங்கள் சில கோடிகளுக்குள் தான் தயாரிக்கப்பட்டன. அதாவது, ஒரு பெரிய ஹீரோ ஒரு படத்தில் வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கு செலவு தான் மொத்த படத்திற்கும் ஆகியுள்ளது. ஆனால் வசூலானது நாலைந்து மடங்கு அதிகம். 100 ரூபாய் செலவழித்து 500 ரூபாய் பார்ப்பது சிறந்ததா அல்லது 1000 ரூபாய் செலவழித்து 1100 ரூபாய் பார்ப்பது சிறந்ததா என நாமே முடிவு செய்து கொள்ளலாம்.சில தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்கள் படங்களை ‛புரோமோட்' செய்வதற்கே பல கோடிகளை செலவழிக்கின்றனர். இந்த செலவில் கூட குட்டி பட்ஜெட் படங்களை எடுத்து விடலாம்.

யோசிக்கும் தயாரிப்பாளர்கள்

இப்படி பெரிய ஹீரோக்களை வைத்து பெருமைக்காக படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு தமிழ் சினிமாவின் சமீபத்திய இந்த போக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ‛‛ஏன் பல நுாறு கோடிகளை செலவழித்துவிட்டு படம் ஓடுமா ஓடாதா என்ற டென்ஷனில் இருக்க வேண்டும். ஒரு ஹீரோவுக்கு கொடுக்கும் சம்பளத்தில் சின்ன பட்ஜெட்டில் 4 படங்கள் எடுத்து விடலாம். நல்ல கதையுடன் காத்திருக்கும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் என்ன'' என்று பெரிய தயாரிப்பாளர்கள் யோசிப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.அப்படி நடந்தால், தமிழ் சினிமாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். மக்களின் ரசனையும் செக்ஸ், வன்முறை போன்ற சீரழிவுகளில் இருந்து மாறி, ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Jay
அக் 25, 2024 21:24

எதார்த்தமான படங்களை தேடி மக்கள் பார்ப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோன்று திறமையாக எதார்த்தமாக இருக்கும் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். தலைமை பண்பை காண்பித்து ஓட்டுகேக்காமல் தலையில் தோப்பாக வைத்து ஓட்டு கேட்பவர்களை தவிர்க்கலாம்.


ஆரூர் ரங்
அக் 25, 2024 19:14

பில்ட் அப் வேணாம். இதே ஆண்டில் படுதோல்வியடைந்த மற்றும் ரிலீஸ் ஆக முடியாத சின்னப் படங்கள் ஏராளமாவது இருக்கும்.


RAMAKRISHNAN NATESAN
அக் 25, 2024 18:51

வேடிக்கையா இருக்குங்க ...... பெரிய டைரக்டர்கள் நெனச்சா நிச்சயம் நல்ல கதையம்சம் உள்ள படம் கொடுக்க முடியும் ....... ஆனா சதையம்சம் இருந்தாத்தானே யாவாரம் நல்லபடியா போவும் ????


சிவம்
அக் 25, 2024 18:50

இப்போதுள்ள மக்கள் சிலருக்கு தெரிந்திருக்கும். சிவாஜி, ரஜினி, கமல், பாக்கியராஜ் போன்ற பெரிய ஹீரோக்கள் நடித்து கொண்டிருந்த காலம் அது. 80 களிள் வெளியான ஒரு படம், ஒரு தலை ராகம். சில லட்சங்களில் எடுக்க பட்ட படம். அனைவரும் புது முகங்கள். படத்தை பார்த்துவிட்டு யாரும் வாங்க தயாராக இல்லை. ஏனென்றால் மக்கள் ரசனை மீது அவ்வளவு நம்பிக்கை. தயாரிப்பாளர் துணிந்து படத்தை ரிலீஸ் செய்தார். படம் படு ஹிட். பாடல்கள் அனைத்தும் ஹிட். எல்லா காலங்களிலும், மக்கள் மனதை புரிந்து கொள்வது கஷ்டம்.


Rajah
அக் 25, 2024 17:47

மக்கள் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் மாற்றத்தை விரும்புகின்றார்கள். திராவிட போதையில் இருந்து மக்கள் விழித்துக்கொண்டார்கள். வாழ்க பாரதம், வளர்க்க தமிழகம்.


Suresh
அக் 25, 2024 16:22

most of our tamil films are just junk..... they try advice / propaganda movies just to launder the black money. get rid of these junk and watch telugu and mallu movies


Narayanan
அக் 25, 2024 15:53

இனி பெரிய நடிகர்களை வேண்டாம் என்று ஒதுக்கி சிறிய இயக்குனர்கள் வரவேண்டும் . கதை , மிகையில்லாத சண்டை , சப்தம் போதும் மக்கள் மாற்றத்திற்கு தயாராகி வருகிறார்கள் . பெரிய இயக்குனரோ , நடிகரோ, நடிகையோ வேண்டாம் . அவர்களை புறம்தள்ள மக்கள் தயாராகிவிட்டார்கள்


Muralidharan S
அக் 25, 2024 15:47

பெரிய ஹீரோக்கள் நடித்து, பல நூறுகோடிகளி இறைத்து எடுத்து வெளிவரும் குப்பை படங்களை மக்கள் பார்க்காமல் புறக்கணித்தால் தானாக எல்லாம் ஒழுங்குக்கு வரும். நல்ல கதை அம்சங்களை கொண்டு சிறிய பட்ஜெட்டில் எவ்வளவு நல்ல மலையாள படங்கள் வருகிறது.. கதையே இல்லாமல் வெறும் சண்டை, கவர்ச்சி / ஆபாசம் என்று தமிழ் படங்கள்தான் தரம் தாழ்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.... பீம்சிங், திருலோகச்சந்தர், எ.பி.நாகராஜன் மகேந்திரன், பாலு மஹிந்திரா, ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, ஆர்.சுந்தராஜன், பாகியராஜ், வசந்த், ஆர்.வீ.உதயகுமார் போன்றவர்களின் படங்களில் நல்ல கதை அம்சம் , திரைக்கதை, வசனம் என்று இருந்தது.. இன்று கதை அம்சம் பொய், சதை அம்சமாகவும், வெட்டு குத்து கொலை என்று ஒரே ரத்தக்களரியாக இருக்கிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா ஒரு குப்பைமேடு.


RAMESH
அக் 25, 2024 15:38

I am wondering.. how you list out Kottukali Movie.. That is Utter Movie.. can anyone say, Director what try to say through that movie.. No story simply wasting public time.


S Ramkumar
அக் 25, 2024 15:23

அந்தகன் படம் விட்டு போய் விட்டது


புதிய வீடியோ