உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனு பெற்றதுடன் அதிகாரிகள் கப்சிப் சிறு தொழில் நிறுவனங்கள் அதிருப்தி

மனு பெற்றதுடன் அதிகாரிகள் கப்சிப் சிறு தொழில் நிறுவனங்கள் அதிருப்தி

சென்னை:விழுப்புரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகள் பெற்ற நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 1,500க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், இயந்திரங்கள், மூலப்பொருட்கள், தளவாடங்கள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கின. ஆலைகள் மீண்டும் செயல்பட நிவாரணம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குறு, சிறு தொழில் சங்க நிர்வாகிகளுடன், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, 'ஒரு நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை நிவாரணம் வழங்குவதுடன், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டியை அரசு செலுத்த வேண்டும்; மின்சார நிலை கட்டணத்தை ஆறு மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது' என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு, அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.இந்த மனுவை, அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை நிவாரணம் அறிவிக்காதது, தொழில்முனைவோர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்முனைவோர் கூறுகையில், 'வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூட, முழுதுமாக நிவாரணத்தை அரசு அறிவிக்கவில்லை. குறு, சிறு நிறுவனங்களிடம் மனு பெற்ற அதிகாரிகள், அரசிடம் இருந்து நிவாரணத்தை விரைந்து பெற்று தர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ