வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கிலோ 20க்க விவசாயிடம் வாங்கினால் நஸ்டம் இல்ல. நானும் பரம்பர விவசாயி
திண்டுக்கல்:திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால் அதன் விலை ரூ.20க்கு குறைந்து விற்றநிலையில் 100 டன் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள்,விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை,திருப்பூர்,நாமக்கல்,தேனி,தாராபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக பெரிய வெங்காயம்,சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் மூடை மூடையாக விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழகம்,வெளிமாநிலங்களிலும் அதிகளவில் உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதனால் விலை தாறுமாறாக குறைந்து கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இந்த விலை குறைவால் சின்னவெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயிகள்கவலையடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சின்னவெங்காயத்தை உள்ளூர் சிறு வியாபாரிகளும் வாங்குவதற்கு தயக்கம்காட்டியநிலையில் 100 டன் அளவிற்கு வெங்காயப்பேட்டையில் தேக்கமடைந்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் இருப்பதற்காக வெங்காயப்பேட்டையில் உள்ள கோடவுன்களில் தேக்கமான சின்ன வெங்காயங்களை பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவைகளை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் கண்விழி பிதுங்கிநிற்கின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் இதன் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிலோ 20க்க விவசாயிடம் வாங்கினால் நஸ்டம் இல்ல. நானும் பரம்பர விவசாயி