உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாட்சிகளை கலைக்க மாட்டாரா; அமைச்சராகும் செந்தில் பாலாஜி பற்றி அடுக்கடுக்காக ராமதாஸ் கேள்வி!

சாட்சிகளை கலைக்க மாட்டாரா; அமைச்சராகும் செந்தில் பாலாஜி பற்றி அடுக்கடுக்காக ராமதாஸ் கேள்வி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்தபோதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து சமூகவலைதளத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அமைச்சரே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி துணை முதல்வர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டு உள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதி

பட்டியலினத்தவருக்கு தி.மு.க., தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருகிறது. தி.மு.க.,வில் பட்டியலின, பழங்குடியின சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 21. பட்டிலயினத்தவர் அமைச்சர்களாக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் மட்டுமங ஒதுக்கப்படுகின்றன. அமைச்சரவையில் ஒருவரை சேர்ப்பதும், நீக்குவதும் முதல்வரின் விருப்புரிமை என்றாலும் கூட, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களாக மக்களுக்கு உரிமை உண்டு.

விளக்கம் அளியுங்கள்!

தமக்கு நாற்காலி வழங்காத கட்சிக்காரரை அடிப்பதற்காக கல்லை எடுத்துக்கொண்டு ஓடியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கியதற்காக கடந்த ஆண்டு மே மாதம் அமடச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கப்பட்டார். ஓராண்டுக்கு முன் தண்டிக்கப்பட்ட அவர், இப்போது எந்த அடிப்படையில் அமை ச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவதற்கு சட்டப்படியாக எந்த தடையும் இல்லை; ஆனால், அவருக்கு தார்மீகத் தகுதி இல்லை.

சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்த போதும், துறை இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடித்தார். அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித் தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். சிறையிலிருந்து பிணையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

சமூகநீதியா?

முதல்வரால் தியாகி என்று போற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாரா? என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும். அமைச்சரவையில் சமூகநீதியா? தி.மு.க.வின் நாடகம் எடுபடாது. தியாகியால் நீதி வளைக்கப்படக் கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Dharmavaan
செப் 29, 2024 21:54

இந்த பொது அறிவு நடைமுறை அறிவு ஏன் நீதிகளுக்கு இல்லை கேவலம் இது ஒரு நாடகம் இவன் வெளியே வருவதும் அமைச்சர் பதவியும் நீதிக்கும் திமுகவுக்கு உள்ள ரகசிய உறவை காட்டுகிறது


Lion Drsekar
செப் 29, 2024 21:07

திரைப்பட நடிகர்களில் இவர்களும் ஒரு நடிகர்கள், கதாபாத்திரங்களை பார்த்து இரசிக்கவேணுமே தவிர அவைகள் அனைத்தையும் உண்மை என்று நம்பினால் , ஹிரண்யாய நமஹ


Lion Drsekar
செப் 29, 2024 21:02

மன்னிக்கவும் அடுத்த இலைக்கு பாயசம் கேட்பவர்கள் போல்தான் இவர்கள் ல்லோருமே , என் குடும்பத்தார் அரசியலுக்கு வரமாட்டார்கள், தவறு செய்பவர்கள் யாராக ருந்தாலும் முச்சந்தியில் நிற்க வைத்து அடியுங்கள் , மேலும் பல இவர்களது தேர்தல் பிரச்சாரத்தில் வீசப்பட்ட வாக்குறுதிகள், அன்றைக்கு இவர்களது சொத்து எவ்வளவு இன்றைக்கு ? இதுதான் ஜயநாகத்தின் பரிணாம வளர்ச்சி.


T.sthivinayagam
செப் 29, 2024 19:51

அவர்சிலரை போல கட்சி மாறியிருந்தால் சாட்சி என்ன கேஸ் இல்லாமே ஆக்கியிருக்களாம்


Duruvesan
செப் 29, 2024 19:30

போங்க பாஸ், நாளைக்கு குவாட்டர் 10 ரஸ் ஏத்திடுவான் ?


V RAMASWAMY
செப் 29, 2024 19:27

எப்படி யாவது வெளியே வருவது அதற்குத்தான். மருத்துவருக்கு தெரிந்தது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியவில்லையே என்பது தான் வருத்தம் .


Kogulan
செப் 29, 2024 19:21

நாம ஏதாவது சொன்னா நீதிபதிய மதிக்கல நீதிமன்றத்தை மதிக்கலன்னு சொல்லி நம்மல தேட ஆரமபிச்சுடுவார்கள் என்னவோ போங்க தர்மம் வெல்லனும்னா அதர்மம் அழியனும் அதுக்கு வழியேயில்லை


vbs manian
செப் 29, 2024 18:10

நல்லாட்சி நேர்மை நாணயத்தில் நம்பிக்கை உள்ள கோடானு கோடி மக்கள் தங்கள் ஆழ்ந்த மனா குமுறலை பதிவு செய்ய வேண்டும். மக்களுக்கு சவுக்கடி.


மணிராம்
செப் 29, 2024 18:08

பதினஞ்சு மாசமா கிழிக்காதவங்க இனிமே என்ன கிழிக்கப் போறாங்க மருத்துவரே?


vbs manian
செப் 29, 2024 18:07

ஜனநாயகத்துக்கு புதிய இலக்கணம் உரை எழுதுகிறார்கள்.


முக்கிய வீடியோ