உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்குக்கு பெரும் பிரச்னை: முதல்வர் ஸ்டாலின் கவலை

சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்குக்கு பெரும் பிரச்னை: முதல்வர் ஸ்டாலின் கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை, கிண்டியில் நடந்த தென்மாநில காவல் துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருள் புழக்கம் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா பயிரிடுதல் தடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் இல்லா மாநிலமாக திகழ நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றவாளியை கைது செய்ய வரும் போது, தமிழக போலீசாருக்கு பிற மாநில போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஒத்துழைப்பு

தமிழக காவல்துறைக்கு அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை. குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கையால் அவர்கள் பலவீனம் அடைவர். போதை பொருளை ஒழிக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை. கேரள போலீஸ் ஒத்துழைப்போடு அண்மையில் நாமக்கல் அருகே ஏ.டி.எம்., கொள்ளையர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள். போதைப்பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இணையதள குற்ற தடுப்பில் பல்வேறு மாநில போலீசார் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்ட நடவடிக்கை

சமூக வலைதள வதந்திகள் சட்டம் ஒழுங்கிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது. சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. 1390 குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பிடிக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பிற்க்கு எதிரான தீவிர சட்ட நடவடிக்கைக்கு காவல்துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம். சமூக வலைதள வதந்திகளை கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

சாண்டில்யன்
அக் 19, 2024 17:37

எள்ளுதான் காயுதுன்னா இத்தனை எலி புழுக்கைகள் ஏன் "காயுது" ன்னு தான் புரியல?


Duruvesan
அக் 19, 2024 17:03

சமூக வலை தளம் முன்பு முரசொலி, நாம காமராஜர் அய்யா,இந்திரா அம்மையார், ராஜிவ் ஜி, கலாம் அய்யா இவர்களை பற்றி எழுதியது அதுவும் அந்த கட்டுமரம் எழுதியது கருத்து சுதந்திரம், அப்பால நாம ஹிந்துக்கள் குறிப்பா பிராமன்ஸ் பத்தி பேசியது எழுதியது கருத்து சுதந்திரம்


selvamurugan sakthivel
அக் 19, 2024 16:17

வதந்தி பரப்ப தான் குடுமா தொலைகாட்சி,அடிமை ஊடகங்கள்,வீரமணி இருக்கும் பொழுது எதற்கு சமூக ஊடங்கள்


RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 15:02

மன்னனை கரிச்சி கொட்டுறாங்க இங்கே .... ஆனா மறுபக்கம் நாற்பதுக்கு நாற்பது ...... எஞ்சுன தமிழன் சரக்குக்கும் காசுக்கும் பிரியாணிக்கும் மோசம் போவதால் சாரி சோரம் போவதால் இந்த எபெக்ட்டு .....


Kasimani Baskaran
அக் 19, 2024 15:00

ஐடி விங்களை வைத்து ஒன்றை உருவாக்கிய தீம்க்கா இன்று அதைப்பார்த்தே பயப்படுவது விந்தையிலும் விந்தை.


RAMAKRISHNAN NATESAN
அக் 19, 2024 14:55

தலீவா ..... நாம பரப்புற வதந்திகள், பொய்ச்செய்திகள் எதுவும் எடுபட மாட்டேங்குது ..... எதையாவது மடைமாற்றினாலும் சங்கிகள் பாயிண்ட் பாயிண்ட்டா அடிச்சு விளாசுறாங்க ..... ஒரு கண்டன அறிக்கை போடுங்க தலைவா ன்னு ஏதோ ஒரு அல்லக்கை புலம்பித்தள்ளியிருக்கு ....... அண்ணாமலை பத்தி செய்தி வந்தா தவறாம கூவுற கூலிப்படை அணி உறுப்பினராகக்கூட இருக்கலாம் .....


Anantharaman Srinivasan
அக் 19, 2024 14:42

கையூட்டு பெற்றுக்கொண்டு போலீசில் போதைப்பொருள் ஒழிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் கருப்பு ஆடுகளை சாமாளிக்க என்ன நடவடிக்கை அரசு எடுத்துள்ளது..?


பாரதி
அக் 19, 2024 14:24

தமிழை உலக மொழியாக ஆக்க வக்கில்லை.... தமிழண்ணையை கற்பழிக்க வந்த ஆங்கிலத்தை உலக மொழி, அது வேண்டும் என்று வெட்கம் கெட்டு பேசுவது... இப்படிப்பட்டவங்க யாராயிருக்கும் தெரியுதா?


சிந்தனை
அக் 19, 2024 14:20

ஓ அப்படின்னா நீங்க டாஸ்மாக்கில் வழங்குறது சத்து மருந்தோ... போதை பொருள் இல்லையோ...


ram
அக் 19, 2024 14:04

உங்களோட ஜாபர் சாதிக்குக்கு ஒரு பதில் சொல்லுங்க.. கோடி கோடியா உங்களுக்கும் கட்சிக்கும் தானே கொடுத்தார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை