உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து கழக பிரச்னைகளுக்கு தீர்வு: முதல்வருக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்

போக்குவரத்து கழக பிரச்னைகளுக்கு தீர்வு: முதல்வருக்கு 9 தொழிற்சங்கங்கள் கடிதம்

சென்னை : போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, முதல்வருக்கு தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் கடிதம் அனுப்பி உள்ளன.அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம், சென்னை பல்லவன் சாலையில் நேற்று நடந்தது. இதில், தொ.மு.ச., ---- சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக இயங்கி வரும், போக்குவரத்து கழகங்கள், விழா காலங்களில் தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். காலியாக உள்ள 25,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடித்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும். கடந்த, 19 மாத காலத்துக்கான, ஓய்வு கால பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும், வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்க வேண்டும். போக்குவரத்து கழக வரன்முறை தொடர்பாக, அ.தி.மு.க., ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்கள் ஒன்பது தொழிற்சங்கங்கள் சார்பில், முதல்வருக்கு கடிதமாக அனுப்பப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RKNRao
நவ 15, 2024 14:51

திரு கல்யாணி சிங்காரவேலு அவர்கள் 95,000, ஓய்வூதியர்களின் மன வேதனையை கூறியுள்ளார்.முற்றிலும் உண்மை.


Kalyani Singaravelu
நவ 15, 2024 06:09

இப்போதுதாவதுமுதல்வர் கண்விழித்துதொழிலாளர்களின் பிரச்சினைகளைஉணர்ந்து பிரச்சினைமுற்றி,போய்உள்ள நிலையில் கும்பகர்ணன் தூக்கத்தை கலைத்து ,ரோம் நகரம் முழுவதும் பற்றி எரியும் போது அந்நாட்டு மன்னன்பிடில்வாசித்து கொண்டு இருந்ததாக கேள்வி பட்டேன்,அது போன்று இல்லாமல் விரைவில் குறைந்த பட்சம் 8ஆண்டுகளாக நிறுத்தி வைக்க ப்பட்டுள்ள பஞ்சப்படி உடனடியாக வழங்க முதலில் உத்தரவு இட்டால் அவரது ஆட்சிக்கும்,அவருக்கும் நல்ல பெயர், இதை ஒரு உண்மையான தி.மு.க.வெறிபிடித்த தீவிரமான கட்சி க்காரனாக கூறுகிறேன்.இல்லை என்றால் அதிகாரிகளின் பேச்சை கேட்டு கொண்டு நடந்தால்,அவரது ஆட்சியின் அழிவிற்க்கு அவரே கால்கோல் விழா நடத்தி கொள்ளுகிறார் என்று அர்த்தம் இதுஎன்போன்ற லட்ச கணக்கான தொண்டனின் விருப்பத்தை கூறி உள்ளேன்.


Ethiraj
நவ 14, 2024 15:07

Why recurring loss how to stop it must be the concern of both govt and staff Fill vacancies how to pay them annual wage bill of 50000 lakhs where is the money.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை