உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்: தர்மபுரி மாவட்டம்

சில வரிகள்: தர்மபுரி மாவட்டம்

ஒகேனக்கல்: வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணியர், காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 2,000 கன அடியாக சீராக வந்து கொண்டிருக்கிறது. நேற்று, வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 10,000 மேல் காணப்பட்டது. இவர்கள், ஆயில் மசாஜ் செய்து, மெயின் பால்ஸில், சினி பால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்தும், ஒகேனக்கலில் பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். தொடர்ந்து, பரிசல்கள் கோத்திக்கல், ஐந்தருவி,பெரியபாணி, மணல் திட்டு வழியாக இயக்கப்பட்டது. இதில், சவாரி செய்த சுற்றுலா பயணியர் காவிரியாற்றின் அழகை கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை