உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என்று சிலருக்கு நப்பாசை; மார்க்சிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' கூட்டணியில் விரிசல் வராதா என நப்பாசையுடன் சிலர் உள்ளனர். ஆனால், அது நடக்காது'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இடம் தர மாட்டோம்

மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:எல்லாரும் எல்லாம் எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்திற்கு கூட்டணி அமைக்கிறோம். மாற்றத்தை நோக்கிய நமது பயணம் திகழ்கிறது. உடனே நிகழ மாற்றம் என்பது மேஜிக் அல்ல. அது 'பிராசஸ்'இந்த பயணத்தில், 2019 முதல் நாம் இணை பிரியாமல் இருக்கறோம். ஏனென்றால் நமது இலக்கு என்ன ? நாம் யாரை எதிர்க்க வேண்டும்? எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு இயங்கி கொண்டு உள்ளோம்.தமிழகத்தில் உள்ள கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என நப்பாசையுடன் சிலர் செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. யாரும் அதற்கு இடம் தர மாட்டோம்.

அலர்ஜி

கூட்டாட்சி என்று சொல், மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜியாக உள்ளது. அப்படியே மாறி விட்டது. மாநில உரிமைகளுக்காக பேசுகிறது அவர்களுக்கு பிடிக்கவில்லை. பா.ஜ.,வின் ஏதேச்சதிகாரத் தன்மையால், அதிகமாக பாதிப்படைவர்களில் முதன்மையாக இருப்பது நானும், பினராயி விஜயனும் தான். இங்கு நாங்கள் பேசுவதை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

சுயாட்சி

மாநில சுயாட்சி என்பது திமுக.,வின் கொள்கை. இதனை அண்ணாதுரை, கருணாநிதி வலியுறுத்தி உள்ளனர். தமிழ் சமுதாயத்தைகாக்க, தேசிய இனங்களை காக்க, மாநிலங்கள் சுயமரியாதையுடன் வாழ சுயாட்சி தீர்மானம் விளங்கிக் கொண்டு உள்ளது.மாநில சுயாட்சிக்காக நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம். இதற்கு எதிராக பா.ஜ., அரசு உள்ளது. மாநில அரசுகள் டில்லிக்கு காவடி தூக்கும் நிலையை மாற்றி அதிகார பரவலுக்கு வழிவகுக்கும் அணுகுமுறையாக இருக்கும் என சொல்லி பிரதமர் ஆன மோடி ஆட்சி தான், மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக, மாநில மொழிகளை சிதைக்கிற ஆட்சியாக, பல்வேறு தேசிய இன மக்களை ஒழிக்கிற ஆட்சியாக, பல்வேறு பண்பாடுகளை கொண்ட மக்களின் நம்பிக்கையை சிதைக்கிற ஆட்சியாக, அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளை டம்மியாக மாற்றி ஒற்றை ஆட்சி கொண்ட பாசிச ஆட்சியாக இன்றைய பா.ஜ., ஆட்சி உள்ளது.

அதிகாரம்

ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம்,ஒரே உணவு, ஒரே தேர்தல் ஒரே பண்பாடு என்ற ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு கட்சி ஆட்சியாக முதலில் அமைந்து ஒரே நபரின் கைகளில் அதிகாரத்தை குவிக்க தான் அது பயன்படும். பிறகு அந்த தனி மனிதர் வைத்ததுதான் சட்டம். அவர் சொல்வது தான் வேதம்.அவர் அங்கீகரிக்கப்பட்டவருக்கு மட்டும் தான் அதிகாரம். அவரால் ஆசிர்வதிக்கப்பட்டவருக்கு மட்டும் தான் நிதி மூலதனமாக ஆகமாறிவிடும்.

என்ன

பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை அழிக்க வேண்டும். தொடர் பிரச்சாரத்தால் மட்டும் தான் அதனை வீழ்த்த முடியும். மக்கள் நலன் என்ற புள்ளியில் நாம் ஒன்றாக இருக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சுயாட்சி காப்பாற்றப்படும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என சர்க்காரியா மற்றும் பூஞ்சி கமிஷன் அளித்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என 2012ல் முதல்வராக இருந்த மோடி கேட்டார். தொடர்ந்து 3வது முறை பிரதமர் ஆன மோடி அதனை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?பல்வேறு சட்டங்களின் மூலமாக மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறீர்களே?ஜிஎஸ்டி மூலம் மாநில நிதி உரிமையை எடுத்து கொண்டீர்களே?எதிர்க்கட்சி ஆளும் மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு அனுமதி தருவதே கிடையாது.மத்திய அரசு சார்பில் சிறப்பு திட்டம் அளிப்பது கிடையாது.எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களி்ல கவர்னர்கள் பா.ஜ., மாநில தலைவராக மாற்றி முழு நேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கின்றனர்.மாநிலங்களின் வளர்ச்சியை தடுக்கப்படுகின்றன.பா.ஜ.,விற்கு எதிரான மாநில அரசுகளை மிரட்டுகிறீர்கள். ஆட்சியை கவிழ்க்கிறீர்கள். கட்சியை உடைக்கிறீர்கள். கட்சி மாற கட்டாயப்படுத்துகின்றீர்கள்.மாநிலங்களே இருக்கக்கூடாது என நினைக்கின்றீர்கள்.பதில் இல்லைகூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு என்ற திட்டத்தின் மூலம் சிதைக்க நினைக்கிறது பா.ஜ., அரசு. தமிழகம், கேரளா, கர்நாடகா எதிர்க்கிறது. இதற்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லவில்லை. அரசியல் சட்ட உரிமைகளை பறிக்கிற ஆட்சியை பா.ஜ., நடத்துகிறது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி, மத நல்லிணக்கத்திற்கு எதிரான, மக்களுக்கு எதிரான பா.ஜ., ஆட்சியின் முடிவில் தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். அதை உருவாக்க இந்தியா முழுதும் உள்ள ஜனநாயக சக்திகளை திரட்டுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

karupanasamy
ஏப் 04, 2025 04:53

எல்லோரும் எல்லாமும் எல்லோருக்கும் ஆகா கேட்கவே ஆனந்தமாக இருக்குறது. முதலில் திமுகவில் தொடங்குவோம் இன்றிலிருந்து கருணாநிதியின் பயோலாஜிக்கல் வாரிசுகள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், கனிமொழி செந்தாமரை அண்ட் கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாமும் என்கிற சித்தாந்தத்தை நடைமுறை படுத்தி அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறோம். இனி திமுக தலைவராக மற்றும் முதலமைச்சராக கதிர் ஆனந்த் அவர்களும் துணை முதல்வராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக ஆ இராசா, முரசொலி அறக்கட்டளை தலைவராக கீதா ஜீவன் அவர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.


Kasimani Baskaran
ஏப் 04, 2025 03:57

பெட்டி மூலம் விரிசலை தடுக்கலாம் - ஆனால் போன மானம் கம்மிகளுக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பு இல்லை. இராஜதந்திர பேச்சு என்று நினைத்துக்கொண்டு கம்மிகளை வைத்துச்செய்த விடியலாருக்கு பாராட்டுகள். கம்மிகள் ஒழித்துக்கட்டப்பட்டால் அது மொத்த இந்தியாவுக்கும் நல்லது.


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 04, 2025 02:06

இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதியில் மொத்தம் 4 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது இந்த கட்சி. அதில் 2 தமிழ்நாட்டில். திமுகவை விட்டால் இந்த கட்சிக்கு வேறு வழி இல்லை..தொகுதிக்கு 25 கோடி கொடுத்து தேர்தல் வேலையும் பார்த்து வெற்றியும் பெற வைக்கும் எஜமானர் திமுக..எந்த கொள்கைக்கு கட்சி ஆரம்பிக்கப் பட்டதோ அதை திமுகவிடம் அடகு வைத்த கட்சி மார்க்சிஸ்ட்.. கடந்த 4 ஆண்டுகளில் தொழிலாளர்களுக்காக இந்த கட்சி தமிழ்நாட்டில் செய்த சாதனைகள் என்னவென்று மாநாட்டில் பேச முடிந்ததா.. ஒன்றும் செய்யவில்லை. இதில் ஓவர் பில்டப் வேறு.. வெகு விரைவில் இந்தியாவில் இருந்து முழுவதுமாக இந்த கட்சி துடைத்து எரியப்படும்..


Dr.C.S.Rangarajan
ஏப் 04, 2025 01:47

காலத்தின் கோலங்கள் அலங்கோலங்களாகப்போவது நமக்கு தெரியக் கூடுமானால் நாம் எல்லோரும் மற்றோருவரை பின்னுக்கு தள்ள முயன்றாலும் முடியாது போய் விவேகம் நிறைந்தவர்களாக ஆகி இருப்போம். கல்வி அறிவில்லாது போனாலும் இச்சிறு மண்டை கருத்து கருவூலமா என நினைத்து சிலரை கண்டு வியந்து பாராட்டும்போது, மெத்தபடித்துவரெல்லாம் அறிவற்றவர் போல் ஆனதெதனால் என நாம் நம் தலையினை சொரிவதல்லாது வேறென்ன செய்யக்கூடும்? கர்மா வீரர் காமராஜர் அய்யா போன்ற ஒருவர் பிறக்க தவமாய் தவமிருப்பினும் சில நூற்றாண்டுகள் ஆகுமோ? தெரிந்தோ தெரியாமலோ கட்டுண்டோம், காலம் கனிந்தால் மீண்டும் சுவாசிப்போம் சுதந்திரக்காற்றை


R.MURALIKRISHNAN
ஏப் 03, 2025 22:41

கம்யூனிஸ்டும் திமுகவும். ஒழிந்தால் இந்தியா வல்லரசாகும்


Matt P
ஏப் 03, 2025 22:34

மாநில சுயாட்சி வேண்டும் என்பதே இதற்கு தான். ஆளுநர் என்ற கடிவாளம் இருக்க கூடாது. மத்திய அரசு ஆட்சியை கலைத்து விடும் என்ற பயத்திலே தூங்குவதும் தான் காரணம்.


Bhakt
ஏப் 03, 2025 22:32

இன்றைக்கு விடியல் சீரியல் எபிசொட் கதை இதுதானா? போர் அடிக்குது நைனா.


Matt P
ஏப் 03, 2025 22:29

மாநில சுயாட்சி என்பது திமுக.,வின் கொள்கை. இதனை அண்ணாதுரை, கருணாநிதி வலியுறுத்தி உள்ளனர் அடுத்தவன் பொண்டாட்டின்னு கூட பார்க்காமல் எப்படியும் பேசுவது எப்படியும் நடப்பது என்பது கூட சிலரின் கொள்கை.. அந்த கொள்கைப்படி யெல்லாம் நடந்தால் தமிழ் கலாச்சாரத்துக்கு களங்கம் ஏற்ப்பட்டு விடாதா? தற்காலத்திற்கு ஏற்ப சுயமாக சிந்தித்து மக்களுக்கு நல்லது செய்ய பாருங்க. சுயஒழுக்கம் இல்லாமல் ஆட்சி செய்தால் எந்த சுயாட்சியும் நமக்கு நன்மை விளைத்து விடாது..மாநில சுயாட்சி கிடைத்து மத்திய அரசிடம் இருந்து எந்த அதிகாரத்தை பறிக்க முயல்கிறீர் என்பதை முதலில் சொல்லுங்கள். எத்தநாளை வூரை ஏமாத்தி கொள்ளை அடிப்பது. அந்த பணம் அடிக்கும் எந்திரத்தை கொடுங்கப்பா... என்று எதிர்பார்க்கிறாரோ


ராமகிருஷ்ணன்
ஏப் 03, 2025 22:10

தமிழக திமுகவினரின் கூட்டணி, மற்றும் இண்டி கூட்டணி துண்டு துண்டாக சிதறி சில்லு சில்லா நொறுக்குவோம் கூட்டணி கொழுப்பை சூடு போட்டு கரைத்து காட்டுவோம். பி ஜே பி, அதிமுக கூட்டணி ஏற்படக்கூடும் என்பதை அறிந்ததும் அதை கெடுக்க உங்க அல்லக்கை ஊடகங்கள் கதறுவதை கண்குளிர ரசிக்கிறோம்


Murugesan
ஏப் 03, 2025 21:58

அத்தனை அயோக்கியனுங்களும் அடுத்தவருடம் தங்களுடன் சிறையில இருப்பாங்க கவலைப்பட வேண்டாம்...


புதிய வீடியோ