உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்

பழனிசாமிக்கு யாரோ சொல்லித்தருகிறார்கள்: கண்டுபிடித்தார் திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு யாரோ சொல்லித் தருகிறார்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவை பாஜ விழுங்கி செரித்துவிடும் என்று திரும்ப திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்புடன், கவலையுடன் சுட்டிக்காட்டியது. அதிமுக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சுட்டிக்காட்டியது. ஆனால் அப்படியே திருப்பி விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும் என இபிஎஸ் கூறியுள்ளார்.அவருக்கு இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று யாரோ சொல்லித்தருகிறார்கள் என்று கருதுகிறேன். அவராகவே இந்த கருத்தை சொல்வதாக என்னால் ஏற்க முடியவில்லை. அதிமுகவுக்கு எதிராக நான் பேசுவதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன்.அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக சொல்கிறேன் என்பதை நன்கு கட்டாயம் உணர்வார்கள். இபிஎஸ்ம் உணர்வார். ஆனால், சேராத இடந்தனில் சேர்ந்திருக்கிற சூழலில், அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று கருதுகிறேன் அப்படி பேசினால், நான் கவலைப்படுவதற்கு ஏதும் இல்லை.2001ல் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓரிரு பொதுத்தேர்தலை விட அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் பயணிக்கிறது. மெல்ல மெல்ல வளர்ந்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருக்கிறது. வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர வீழ்ச்சி அடையவில்லை. எனவே இபிஎஸ் திரித்துப் பேசுவதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிதொடர்ந்து எதிர்க்கும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

c.mohanraj raj
ஜூலை 24, 2025 04:23

இவரால் அறிவாலய கக்கூஸ் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது


sridhar
ஜூலை 23, 2025 22:04

எப்படி தான் பெருமையாக பேசமுடிகிறதோ ,


MARAN
ஜூலை 23, 2025 20:59

மற்ற கட்சிகளுக்கு ஜோதிடம் கணிப்பதை விடுத்து , உங்கள் ஜோதிடத்தை பாருங்கள் , அறிவாலயத்தை விட்டு வெளியே வரமுடியுமா , சொந்த கட்சி சின்னத்தில் நிற்க வாய்ப்பு கிடைக்குமா ,இரட்டை இலக்க தொகுதி கிடைக்குமா , உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம்.


SIVA
ஜூலை 23, 2025 20:52

அமித்ஷா இவர்களை இப்போதே தேர்தலை நினைத்து புலம்ப வைத்து விட்டார் ....


ராமகிருஷ்ணன்
ஜூலை 23, 2025 20:52

அப்போ திமுக சொல்லி கொடுத்து தான் நீங்க தினம்தினம் புதிது புதிதாக குழப்பம் உண்டாக்குகின்றீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?


Kjp
ஜூலை 23, 2025 20:26

இப்போ என்ன சொல்ல வருகிறீர்கள் திருமா.கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி இல்லாமல் இந்த சட்ட மன்ற தேர்தலிலும் சின்ன கட்சிகளை சேர்த்து நின்று மண்ணை கவ்வி வேண்டும் என்று கணக்கு போடுகிறீர்களா.பாஜக வை விட்டு அதிமுக வந்தால் நீங்கள் திமுக வை விட்டு விலகி அதிமுக வுடன் கூட்டணி வைத்து கொள்ள தயாரா?ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலை பட்டதால்.உங்களுக்கு பிளாஸ்டிக் சேர் போதும் என்று நினைக்கிறீர்கள்.அதிமுகவைப் பற்றி பாசாங்கு கவலை வேண்டாம்.


தாமரை மலர்கிறது
ஜூலை 23, 2025 20:22

உதய சூரியனிடமிருந்து கொடநாடு கொலைப்பழியிலிருந்து தப்பிக்க, ரெட்டை இலைக்கு தாமரை தேவைப்படுகிறது. தாமரை மலர் இல்லாத ரெட்டை இலை வேரோடு வெட்டப்படும். பழனிக்கு புரிந்தது, குழம்பிய குருமாவுக்கு புரியவில்லை.


Kjp
ஜூலை 23, 2025 20:28

இது ஒரு புதிய கண்டுபிடிப்பு.


Rajakumar PT
ஜூலை 23, 2025 20:20

இவர் இவருடைய கட்சியை விட அதிமுக மேல் இவ்வளவு அக்கறை ஏன் என்று தெரியவில்லை


சங்கி
ஜூலை 23, 2025 20:19

இவருக்கென்ன கவலை பிளாஸ்டிக் சேருக்கு. மூடிக்கொண்டு அறிவாலய முறை வாசல் செய்யுங்க.


Shankar
ஜூலை 23, 2025 20:15

நீங்களே சொல்லிக்கொடுத்துட்டு யாரோ சொல்லித்தர்றாங்கன்னு சொல்றீங்களா? அதிமுகவை பாஜக விழுங்குவது இருக்கட்டும். நீங்க முதலில் பிளாஸ்டிக் இருக்கைல இருந்து திமுகவினர் போல அவர்களுக்கு இணையாக உட்கார பாருங்கள். அது தான் உங்களுக்கும் மரியாதை. உங்களை நம்பி இருக்கும் பட்டியலினத்தவருக்கும் மரியாதை.


முக்கிய வீடியோ