உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரி அரசியலில் களமிறங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் 

புதுச்சேரி அரசியலில் களமிறங்கிய லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., வில் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், காமராஜர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது. புதுச்சேரியில் ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்ட் ஆகியோர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். ஜான்குமார் அரசியலுக்கு வருவதற்கு முன், லாட்டரி சீட்டு விற்பனை செய்தார். அவரது குருவாக லாட்டரி அதிபர் மார்ட்டின் இருந்தார். லாட்டரி தடை செய்யப்பட்டதால், கேபிள் டி.வி., நடத்திக் கொண்டு அரசியலில் கால் பதித்தார்.தமிழகத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்த நிலையில், மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று புதுச்சேரி வந்தார்.காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். புதுச்சேரி பா.ஜ.,வில் சேர்ந்துள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 1,000 புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்த்தார். நிகழ்ச்சியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், வெங்கடேசன், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், அங்காளன், கொலப்பள்ளி சீனிவாஸ் கலந்து கொண்டனர்.அரசியலில் தீவிரமாக பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என, ஜோஸ் சார்லஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 18, 2024 09:28

இது ஒரு கேடு கெட்ட அரசியல். குற்றவாளிகள் எங்கேயும், எப்போதும் குற்றவாளிகள்தான். ஆனால், பிஜேபியின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. நாட்டை சீர்திருத்த வேண்டியுமெனில் லஞ்ச ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்க்கு காரணமானவர்கள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேண்டும். ஆனால், அவர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது எப்படி சரி என்பதை பிஜேபியும் மோடிஜியும் அறிவிக்க வேண்டும்.


sankaranarayanan
நவ 18, 2024 08:53

பர்மாவிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்த மார்ட்டின் குடும்பப இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் அவர்களில் ஒருவர் மகளின் கணவர் வி.சி.கட்சியில் தமிழத்தில் துணை தலைவராக உள்ளார் மாற்றுரு மகன் புதுவையில் பி.ஜே .பியில் ஐக்கியமாகி எம்.எல். ஏ ஆகப்போகிறார் இவர்களின் அரசில் பிரவேசம் பார்த்தியர்களா எப்படி முன்னேறியுள்ளதென்று


Samy Chinnathambi
நவ 18, 2024 08:35

பா.ஜெ.க வில் பணி செய்தால் நீங்கள் போதை மருந்து கடத்தி விற்றால் கூட உத்தமர்கள்..மற்ற கட்சியில் இணைந்தால் மட்டுமே கொடியவர்கள்..ஆண்டி இந்தியன். .திமுக பா.ஜெ.க ரெண்டு பேருமே தலா 540 கோடி மற்றும் 1140 கோடி தேர்தல் நன்கொடை என்ற போர்வையில் லஞ்சத்தை மார்ட்டின் இடம் பெற்று கொண்டு ஒரு கண் துடைப்பிற்காக லாட்டரிக்கு எதிராக தீர்மானம் ஏற்றி அதனை கவர்னர் பத்திரமாக வைத்து கொண்டுள்ளார்.


Duruvesan
நவ 18, 2024 07:20

ஆக பிஜேபிக்கு தமிழக தேர்தல் செலவு ரெடி


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 06:18

பாஜகவும் கழகங்கள் லெவலுக்கு இறங்கிருச்சு ......


Srinivasan Narasimhan
நவ 18, 2024 04:30

தப்பு செய்துட்டு கட்சியில் சேர்வதும் தப்பு செய்வதற்காக கட்சியில் சேர்வதும் ஜனநாயக படு கொலை


புதிய வீடியோ