உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென் மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயக்கம்

தென் மாவட்ட ரயில்கள் வழக்கம் போல இயக்கம்

சென்னை:புயல்மழை காரணமாக, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட விரைவு ரயில்கள், நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டன.விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே, ரயில்வே பாலத்தின் மேல் வெள்ளம் ஓடியதால், கன்னியாகுமரி, செங்கோட்டை உட்பட தென்மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி வந்த, 12 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. அத்துடன், 15க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் பாலம் வழியாக, நேற்று ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், குறைந்த வேகத்தில் இயக்க வேண்டிய நிலை இருந்ததால், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில்கள், நேற்று தாமதமாக சென்னை வந்தன. துாத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை, 7:35 மணிக்கு வர வேண்டிய முத்துநகர் விரைவு ரயில், காலை, 10:15க்கு வந்தடைந்தது. செங்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இருந்து வந்த ரயில்கள், ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வந்தடைந்தன.இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து அனைத்து ரயில்களும் வழக்கமான பாதையில் இயக்கப்பட்டன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இணை ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில், நேற்று இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. மற்ற அனைத்து விரைவு ரயில்களும், சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு வழக்கம் போல இயக்கப்பட்டன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ