உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம்

சென்னை: ''நாட்டிலேயே பயணியர் கட்டணம் வாயிலாக வருமானம் ஈட்டுவதில், தெற்கு ரயில்வே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரயில்களின் எண்ணிக்கையை, 50 சதவீதம் அதிகரிக்க உள்ளோம்,'' என, தெற்கு ரயில்வேயின் பயணியர் பிரிவு தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் கூறினார். தெற்கு ரயில்வேயில் சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=thn2gbwq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

32 கோடி பேர் பயணம்

பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கம், ரயில் நிலையங்கள் மேம்பாடு, ரயில்களின் வேகம் அதிகரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பயணியர் ரயில்களை இயக்குவதிலும், தெற்கு ரயில்வே தொடர்ந்து முழு கவனம் செலுத்தி வருகிறது. இதனால், பயணியர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேயில், கடந்த ஏப்., முதல் ஆக., வரை மொத்தம், 32.15 கோடி பேர் பயணித்துள்ளனர். இது, இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 6.58 சதவீதம் அதிகம். நாடு முழுதும் ரயில்வேயில் பயணியர் பிரிவில், அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது. அதாவது, கடந்த ஏப்., முதல் ஆக., வரை, 3,273 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது; அதற்கு முந்தைய ஆண்டை விட, 4.71 சதவீதம் அதிகம்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி:

பயணியர் பிரிவை மையமாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்படுகிறது. பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்பாடு, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில்களின் வேகம் அதிக ரிப்பு, முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதன் விளைவாக, கடந்த ஏப்ரல் முதல் ஆக., முதல், 32.15 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக, 3,273.38 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டிய பட்டியலில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் இருக்கிறது. கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு, ரயில் பாதைகள் அவசியம். சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை, 3, 4வது புதிய பாதைகள், 365.42 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. பெரம்பூர் - அம்பத்துார் இடையே, 5, 6வது கூடுதல் ரயில் பாதைகள் அமைக்க உள்ளோம்.

ரூ.2,144 கோடி

தற்போது, முதல் கட்டமாக, 177 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 4வது புதிய ரயில் பாதை, 714 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. சேலம் - திண்டுக்கல் இடையே, 165 கி.மீ., துாரம் இரட்டை பாதை பணிகளும், 2,144 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில், 1,255 கோடி ரூபாயில், புதிய மற்றும் இரட்டை பாதைகள் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். 650 மின்சார ரயில்கள் உட்பட தினமும், 1,400க்கும் மேற்பட்ட ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இப்பாதை பணிகள் முடியும் நிலையில், 2030ல் தற்போதுள்ளதை காட்டிலும், 50 சதவீதம் ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார் சென்னை - ராமேஸ்வரம் இடையே 'வந்தே பாரத்'  சென்னை எழும்பூர் - ராமேஸ்வரத்துக்கு, 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை - சென்ட்ரல் வந்தே பாரத் ரயில், 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும். இதேபோல், தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கும், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க, வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது  சென்னை பெரம்பூரில் புதிய ரயில் முனையம், 342 கோடி ரூபாயில் அமைக்க, ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறது. 2028ல் பணிகள் முடியும்போது, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்  எழும்பூரில், 734.91 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், 2028ல் முடிக்கப்பட உள்ளன. இதேபோல், தாம்பரம், சென்ட்ரல் ரயில் நிலையங்களை மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. வாரியத்தின் ஒப்புதலுக்கு பின், பணிகளை மேற்கொள்ள, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Venugopal S
செப் 24, 2025 18:22

வருமானத்துக்கு தென் இந்தியா, புதிய ரயில்வே திட்டங்கள், வசதிகள் மற்றும் ரயில்வே வேலை வாய்ப்புகள் எல்லாம் வட இந்தியாவுக்கே என்பது தானே மத்திய அரசின் கொள்கை!


Kulandai kannan
செப் 24, 2025 16:47

ஆனால் திருவாரூர் நிலவரம் எப்படி?


NIyayanidhi
செப் 24, 2025 14:49

இதற்கு காரணம் தென்னிந்தியாவில் இருப்பவர்கள் ஒழுங்காக பயண சீட்டு எடுத்து பயணம் மேற்கொள்வதுதான். இதுவே வட இந்தியாவில் ஓசி பயணம் மேற்கொள்வர்களே அதிகம். என வட இந்திய இரயில்வேயின் வருமானம் குறைவு.


ஆரூர் ரங்
செப் 24, 2025 14:19

இதெல்லாம் பெருமையே அல்ல. சரக்கு கூட்ஸ் போக்குவரத்து மூலமே ரயில்வேக்கு லாபம். பயணிகள் ரயில்களால் பெரும் நஷ்டமே. இதை டிக்கெட்டிலேயே குறிப்பிடுகின்றனர்.


A.MURALIDHARAN
செப் 24, 2025 13:30

Villupuram junction is neglected. What is the revenue. There is no direct train to delhi gujarat and mimbai


Ram pollachi
செப் 24, 2025 12:26

தமிழக மக்களுக்கு இரயில் விடுவது முதல் சீட் ஒதுக்குவது வரை எல்லாவற்றிலும் ஓரவஞ்சனை தான் நடக்குது. கோவை - மந்தராலயம் டிக்கெட் தீர்ந்து விடும்.ஆனால் பாலக்காடு, ஒத்தப்பாலம் முதலிய ஊர்களில் டிக்கெட் புக் செய்து கோவையில் ஏறும் அவலநிலை. இதுபோல் பல நிகழ்வுகள் தமிழக மக்களுக்கு உண்டு. குறிப்பாக ஆன்மீக யாத்திரை செய்பவர்கள் நிலை பரிதாபம். இந்த தண்ட செலவு எல்லாம் பிற மாநில மக்களுக்கு கிடையாது. பிளாட்பாரம் டிக்கெட் எதுக்கு மத்திய அரசுக்கு தர வேண்டும் என கேட்பார்கள். அதே கோவையில் பி.டிக்கெட் எடுக்காமல் வந்தால் அந்த மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் இங்கே அபராதத்தை வசூலித்து விடுவார்கள். எல்லாவற்றிலும் இலக்கு உண்டு. பிறகு என்ன தென்னிந்திய இரயில்வே தான் நெம்பர் ஒன். ஆந்திரா தாண்டி விட்டால் டிக்கெட் பரிசோதகர்க்கு இரண்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கூடவே வருவதை பார்க்க முடியும்....


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 24, 2025 13:03

எல்லா ரயில்களிலும் ஒவ்வொரு ஊருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். கோவை நகருக்கு உள்ள டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டால் வேறு ஊர் கோட்டாவில்தான் பயணிக்க முடியும். இன்றும் மேட்டுப்பாளையதிலிருந்து சென்னைக்கு டிக்கெட் வாங்கி கோவையில் ஏறி செல்லும் பலர் உண்டு.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
செப் 24, 2025 11:20

உடனே இங்கு புதிய திட்டங்கள் இல்லை என்று சிலர் சொல்வர். இருக்கும் இரட்டை ரயில் பாதையில் ஒரு அளவுக்கு மேல் ரயில்களை இயக்க முடியாது. அதற்கு மேலும் புதிய பாதை அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரயில்பாதையின் இருபுறமும் நூறு அடி நீளம் வேண்டும் என்றால் கொடுப்பதற்கு தயாராக இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களும் கோடிகளில் பேரம் பேசுவர். உண்மை கசக்கும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 24, 2025 10:28

பயணியர் வருமானத்தில் தெற்கு ரயில்வே முதலிடம் என்பது பெரிய ஆச்சர்யமான செய்தியல்ல. இங்கேதான் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கின்றனர். மற்ற ரயில்வேக்களில் எல்லாம் இலவசம்தான். TTR களும் எதுவும் கண்டு கொள்வதில்லை. மேலும் சாதாரண ரயில்களை இயக்காமல் வந்தே பாரத் என்று கூறி கூடுதலாக இங்கேதான் வசூலிக்க முடியும். அப்புறம் போதிய ரயில்களை இயக்காமல் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று கூறி குறைந்த ரயில்களைக்கொண்டே அதிக லாபம் சம்பாதிக்க முடியும். நிறைய சாதாரண ரயில்களை எக்ஸ்பிரஸ் என்று கூறி அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். செங்கோட்டை மதுரை பாசஞ்சர் ரயில் இதற்க்கு ஒரு பெரிய உதாரணம். இப்படி மக்களை வதைத்து லாபம் ஈட்டுவதாக பீத்திக்கொள்கிறார்கள். ஆனால், மக்களை கசக்கி பிழிந்து வருமானத்தை பெருக்குவதற்காக கூறுகிறார்கள். அந்த பக்கம் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து கட்டிங் வேறு. இந்த தெற்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்தால் இது உண்மை என்பது விளங்கும். இங்கே மக்களுக்காக எவனும் இல்லை. மோடிஜியை நம்பி பலனில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்


Seyed Omer
செப் 24, 2025 10:02

முன்னாள் மத்திய அமைச்சருமான லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரி இரட்டைவழி ரயில்பாதை எப்போது நடைமுறை அமுலுக்கு வரும் மேலும் கிழக்குகடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் அதிராம்பட்டினம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியாகுமரிக்கு ரெயில்பாதை எப்போது. அமைக்கப்படும் தூத்துக்குடி அருப்புக்கோட்டை மதுரை ரெயில்பாதை எப்போது அமைக்கப்படும் சென்னையி்ல் இருந்து ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு ஒரே ஒரு ரயில்சேவை மட்டுமே உள்ளது எனவே தூத்துக்குடி வழியாக மேலும் ரெயில் விட வேண்டும் வருமானத்தை அள்ளித்தரும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை ஒன்றியச்


அப்பாவி
செப் 24, 2025 08:56

வடக்கே எவன் டிக்கெட் வாங்குறான்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை