உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் இயக்குவதில் தெற்கு ரயில்வே சுணக்கம்; ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா

கோடை விடுமுறை சிறப்பு ரயில்கள் இயக்குவதில் தெற்கு ரயில்வே சுணக்கம்; ஓட்டுநர் பற்றாக்குறை காரணமா

மதுரை: தெற்கு ரயில்வேயில் ரயில் ஓட்டுநர், கார்டு உள்ளிட்டோர் பற்றாக்குறையால் கோடை விடுமுறையில் சிறப்பு ரயில்களை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.சனி தோறும் இயக்கப்படும் ஹூப்ளி - ராமேஸ்வரம் (07355) மார்ச் 22 முதல் ஏப்., 26 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹூப்ளி (07356) மார்ச் 23 முதல் ஏப்., 27 வரை, நாகர்கோவில் - தாம்பரம் (06012) ஏப். 13 முதல் ஜூன் 29 வரை, திங்கள் தோறும் இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் (06011) ஏப். 14 முதல் ஜூன் 30 வரை 'இயக்க'காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.மக்களிடம் வரவேற்பு பெற்ற மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (06029/06030), எழும்பூர் - திருநெல்வேலி - எழும்பூர் (06069/06070) ஆகிய வாராந்திர ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. தைப்பூசத்திற்கு பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும் திருச்செந்துாருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை.சென்னை - நாகர்கோவில் இடையே இரட்டை ரயில்பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலை தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என பயணிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ஏற்கனவே இயங்கிய சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓட்டுநர், கார்டு உள்ளிட்டோர் பற்றாக்குறையே இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.தெற்கு ரயில்வேயில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல் ரயில்வே வாரியம் தாமதிப்பதால் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு ஊழியர்கள் மீது பணிச்சுமை அதிகரிக்கிறது. மன அழுத்தத்துடன் பணிபுரிவதால் விடுப்பில் செல்லும் நிலையுள்ளது. இதன் காரணமாக சிறப்பு ரயில்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரவுள்ள மாசி பெருந்திருவிழா, கோடை விடுமுறையின் போது சிறப்பு ரயில்களை இயக்குவதில் சுணக்கம் ஏற்படும்.தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், ''மதுரைக் கோட்டத்தில் 50 ஓட்டுநர்களின்பற்றாக்குறை உள்ளது.இதனால் தென்மாவட்டங்களை மையமாக வைத்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே போதுமான ரயில்ஓட்டுநர்களை பணியமர்த்தி கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அகில்
பிப் 18, 2025 16:34

போறும்டா... வெயிலுக்கு அலையாம வீட்டிலேயே இருங்க. சுற்றுலா போய் கூட்ட நெரிசலில் சாவாதீங்க.


Jayaraman Ramaswamy
பிப் 18, 2025 12:47

சென்னையில் சுபர்பன் ரயில்களுக்கு டிரைவர் இல்லாமல், அடிக்கடி ரயில்கள் கான்செல் ஆகுது, வெளியில் தெரியாது. இப்படியிருக்க சிறப்பு ரயில்க்கு எங்கேயிருந்து ஓட்டுநர் வருவார். இருக்கும் ஓட்டுனர்கள் வேலை பளுவால் அவதிப்படுகிறார்கள்.


Ray
பிப் 18, 2025 10:27

சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற லோகோ பைலட்டுகளை, கார்டுகளை ஓராண்டுக்கு அவர்கள் கடைசியாக பெற்ற மாத சம்பளத்துக்கு குறையாமல் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாமே. தமிழ்நாட்டை பழிவாங்க இது மற்றுமொரு உத்தி இதையெல்லாம் கண்டுக்கவோ கேட்கவோ நாதியில்லை என்பதும் நிதர்சனம் ஆகவே மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சிலநாள் தியாகம் செய்து மக்கள் எழுச்சி தேவைப்படுகிறது மோடி இதைத்தான் விரும்புகிறாரோ


veeramani
பிப் 18, 2025 09:54

இந்திய ரயில்வே ..உலகத்தில் முதலாவது பெரிய அரசு துறை . மத்திய அரசினால் கண்காணிப்பில் இருக்கும் முக்கிய குறை. இந்திய மக்களின் வாழ்வில் இணைந்த துறை. பல இடங்களில் சிக்னல் ரயில் பாதை மற்றும் பழம்கள் போன்றவற்றினை புதுப்பிக்க நேரம் தேவை. மனித உழைப்புகள் தேவை. முதலில் பணம் தேவை. ஒரு பண்டிகை நாட்களில் அனைவரும் கேட்பது பல பல ரயில்கள். ஆனால் ரயில் பெட்டிகள், என்ஜினீக்கள், மற்றும் திரிவீர்கள் தேவை .எனவே ரயில்வே துறையை குறை குற்றம் சொல்லவேண்டாம் . உங்களது மொபைல் போன் போல சவ்விட்ச் ஆன் பண்ணியதும் நீங்கள் பார்க்கும் தரவுகள் போல எண்ண வேண்டாம் . எவனாயினும் சரி குறை சொல்லுவதை நிறுத்துங்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 18, 2025 09:45

இதெல்லாம் ஒரு கேவலமான செயல். ரயில் ஓட்டுனர்களை நியமிக்காமல் லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைப்பது ஒரு அரச பயங்கரவாதம்தான். இதுவரையில் இரட்டை ரயில் பாதை இல்லாததுதான் பெரிய குறை என்று கூறினார்கள். இருந்தால் நாங்கள் அறுத்து தள்ளி விடுவோம் என்றார்கள். ஆனால், இப்பொழுது எல்லாமே இருக்கிறது. ஆனால், ஓட்டுனர்கள் இல்லையாம். எல்லாவற்றிக்கும் காரணம் இடையில் உள்ள லஞ்ச ஊழல் அதிகாரிகள். இவனுக மக்களை என்னதான் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத இவர்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்துகொண்டு தாங்கள் மட்டும் சொகுசாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் அனைவரும் சேர்ந்து நடுரோட்டில் விட்டு அடிக்க வேண்டும்.


R Hariharan
பிப் 18, 2025 09:17

பல இடங்கள் காலியாக இருக்கு. திரு பாண்டியராஜா அவர்களே, முதலில் செங்கோட்டை மைசூரு, செங்கோட்டை திருப்பதி, பாண்டிச்சேரி, செங்கோட்டை கன்னியாகுமாரி, திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம், போன்ற இடங்களுக்கு ரயில் சேவை தொடங்க உரிய நடவடிக்கை தேவை.


இறைவி
பிப் 18, 2025 05:51

நாங்களெல்லாம் எந்த அளவிற்கு முன் யோசனையுடன் வேலை செய்கிறோம் தெரியுமா? மக்கள் சேவையில் ஒரு சிறு குறை காண இடம் கிடைத்தாலும் போதும். நாங்கள் ஒரு பெரிய குழுவே நாள் முழுதும் சிந்தித்து ஒன்றிய அரசின் பேரில் அதை மடை மாற்ற கருத்து போடுவோம். ஐம்பது கோடி மக்கள் நாற்பத்தைந்து நாட்களில் ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் எத்தகைய முன்னெடுப்பு செய்ய வேண்டும். அதில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இரயில்கள் விடுவதும் ஒன்று. அப்படி இரயில்கள் விட ரெயில் பெட்டிகளும் ஓட்டுநர், கார்டு இவர்களும் தேவை. அம்மாதிரி இடங்களுக்கு அதிகப்படி இரயில்கள் விடும்போது, இம்மாதிரி சிறப்பு இரயில்கள் நிறுத்தப் படுவது தவிர்க்கமுடியாது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளாவிற்காக நானூறு ரெயில் பெட்டிகளையும், டிரைவர், கார்டுகளையும் பணியமர்த்த முடியாது. இம்மாதிரி வசதிகள் மடைமாற்றம் செய்யப்படுவது தமிழகத்திலும் உண்டு. முக்கிய கோவில் விழாக்களுக்கும், தீயமுகவின் மாநில மாநாட்டிற்கும் தினப்படி ஒடும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு மாற்றி விடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் இவர்களுக்கு பார்வை தெரியாது. மேலும் பணி ஓய்வு பெற்று பல காலம் ஆன பின்னும் அரசியல் மத ஆதரவுடன் இன்னமும் யூனியனை நடத்தும் கூட்டத்தை நகர்த்தினால் போதும். எல்லாம் நேராகி விடும். ஐம்பது கோடி மக்கள் வரும் ஒரு விழாவிற்கு செய்திருக்கும் ஏற்பாடுகள் மிக மிக உயர்வு. நாமும்தான் சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்தோமே.


Ray
பிப் 18, 2025 04:00

ஓட்டுனர்களை நாளையே பணியமர்த்தினாலும் மறுநாளே அவர்கள் ரயில்களை இயக்க தகுதி பெற்றவர்களாக இருக்க முடியாது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ரயில்பாதை மேடு பள்ளங்கள் வளைவுகள் சிக்கனல்கள் எங்கெல்லாம் உள்ளது எங்கெங்கு வேக கட்டுப்பாடுகள் என ஒரு வாரமாவது UP & DOWN எஞ்சினில் பயணித்து தெரிந்து கொள்ள வேண்டும். சர்விஸ் போட்ட லோகோ பைலட்டுகள் கூட ஒரு குறிப்பிட்ட லைனில்தான் பணியாற்ற முடியும் இதெல்லாம் கம்பியூட்டர் என்ஜினியரான மந்திரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கும்ப மேளாவுக்கு பல ரயில்களும் கொண்டுபோய்விட்டதும் மற்றொரு பிரதான காரணம் அதை மறைக்க ஓட்டுநர் கார்டு இல்லையென மடை மாற்றம் செய்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை