உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் குடும்பத்துக்கு பலனளிக்கும் விண்வெளி தொழில் கொள்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஸ்டாலின் குடும்பத்துக்கு பலனளிக்கும் விண்வெளி தொழில் கொள்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கை, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் நலன் அடைவதற்காக உருவாக்கப்பட்டது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தொழில் துறை உருவாக்கியுள்ள விண்வெளி தொழில் கொள்கை - 2025க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aflcs1lg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து, தமிழக விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில் கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். தமிழகம் போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, 2025ம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு தங்கள் குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில் கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்!. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

R MANIVANNAN
ஏப் 19, 2025 13:18

உங்களுக்குத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே


Madras Madra
ஏப் 19, 2025 10:30

அதானே பார்த்தேன் என்னடா நாம இவ்வ்ளோ வளர்ந்துட்டமான்னு நாங் கூட ரொம்ப பெருமையாய் ட்டேன் அண்ணாமலை சொன்ன பிறகுதான் எல்லா குடும்ப வளர்ச்சிக்குன்னு புரியுது திராவிடம்


Dominic
ஏப் 18, 2025 20:48

அண்ணாமலைக்கு..ஆற்றல் இருந்தால் தொடங்குங்க.வன்மம் வேண்டாம் . ப்ரௌட் கர்நாடகக்காரர் .


Krishnamoorthy Perumal
ஏப் 18, 2025 17:29

கொள்ளை அடித்த பணத்தை கொண்டு குடும்பத்துடன் விண்வெளில் மறைந்து கொள்ளலாம்


venugopal s
ஏப் 18, 2025 16:41

இதுவும் அண்ணாமலை வழக்கமாக விடும் புஸ்வாணம் தான்!


vivek
ஏப் 18, 2025 17:04

அந்த புஸ்வாணம் உனக்கு பின்னாடி வருது...தள்ளி உட்காரு வேணு


Sampath Kumar
ஏப் 18, 2025 16:41

அய்யா தர்மம் பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா இப்போ வான் மண்டலம் வரை உருட்டு பூலோகத்தில் உன்னை புறம் தள்ளி ஆச்சு அதுனால உன் வானர புத்தி இப்போ வின்வெளிக்கு போல போவியா


S.Martin Manoj
ஏப் 18, 2025 15:48

எப்படி அண்ணாமலை கச்சா எண்ணெய் விலை 62 டாலரில் கிடைக்கும் தற்போதய நிலையில் கூட பெட்ரோ டீசல் விலையை குறைக்காமல் 2 ரூபாய் ஏற்றிய மோடி தன்னுடய எஜமானர் விசுவாசத்தை காட்டுவதை போலவா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 18, 2025 16:11

தமிழக அரசு அ முதல் ஃ வரை அனைத்திற்கும் விலையேற்றியதை இங்கு கூறியிருக்கலாம்


sridhar
ஏப் 18, 2025 16:27

ஐயோ பாவம் . உங்களுக்கு forward contract , options போன்ற வர்த்தக டெர்ம்ஸ் எல்லாம் தெரியாது போல.


என்றும் இந்தியன்
ஏப் 18, 2025 17:01

Crude Oil In simple words, every 159 liters barrel of Crude oil produces the following: 73 liters பெட்ரோல் 36 liters டீசல் 20 liters Jet fuel & heavy fuel oil 6 liters Pre & 34 liters of other products Butane, Asphalt & சுலபஹுர், now you calculate


VIDYASAGAR SHENOY
ஏப் 18, 2025 15:41

விண்வெளி தொழில் கொள்கை இல்லை - கொள்ளை செயல் வடிவம்


Thetamilan
ஏப் 18, 2025 14:35

மோடிக்கும் ஸ்டாலினுக்கும் அப்படி ஒரு ஒற்றுமை என்கிறாரே


angbu ganesh
ஏப் 18, 2025 14:32

பிஜேபி தனியவே நிக்கலாம் அண்ணாமலை இருக்க பயமேன்


சமீபத்திய செய்தி