உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி பாட புத்தகங்களில் விண்வெளி அறிவியல் இஸ்ரோ தலைவர் விருப்பம்

பள்ளி பாட புத்தகங்களில் விண்வெளி அறிவியல் இஸ்ரோ தலைவர் விருப்பம்

சென்னை: ‘‘பள்ளிகளில் அறிவியல் பாடப் புத்தகங்களில், விண்வெளி அறிவியல் சார்ந்த பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும்,’’ என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோவின் தலைவர் நாராயணன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், விண்வெளி சென்ற முதல் வீரர் யூரி ககாரி சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று (நவ.,5) நடந்தது. இஸ்ரோ தலைவர் நாராயணன் சிலையை திறந்து வைத்தார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் திட்டத்திற்கான பணிகளை, இஸ்ரோ தீவிரப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு ரஷ்யா உதவுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், படிக்கும் காலத்தில் நன்றாக படிக்க வேண்டும். நல்லவர்களாக வளர வேண்டும். தங்களின் தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரிய இலக்கை நிர்ணயித்து பயணிக்க வேண்டும். பள்ளி அறிவியல் பாடப்புத்தகங்களில், விண்வெளி அறிவியல் சார்ந்த பாடத்திட்டங்களை சேர்த்தால், அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு தேவையான வானிலை தகவல்களை, செயற்கைக் கோள்கள் வழியே, இஸ்ரோ வழங்கி வருகிறது. அதை வைத்து, வானிலை ஆய்வு மையம் வானிலை நிகழ்வுகளை கணிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 05, 2026 20:58

கட்டாயம் சேர்க்கப்படவேண்டும். இஸ்ரோ தலைவரின் விருப்பம் உடனே நிறைவேற்றப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி