உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உறுப்பினர் சேர்க்கையின்போது, ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கட்சியினர் கலந்துரையாட வேண்டும்' என, தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.'ஓரணியில் தமிழகம்' உறுப்பினர் சேர்க்கை குறித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:தமிழக மக்களை ஓரணியில் கொண்டு வர, வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும்; பொது மக்களையும், இளைய தலைமுறையினரையும் தி.மு.க.,வில் புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தி.மு.க., நிர்வாகிகள், மக்களை தேடி வீடு வீடாக செல்லும்போது, அவர்களுக்கு கிடைக்கிற வரவேற்பு கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். செல்லும் இடமெல்லாமல் மக்களின் உற்சாக வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும்போது, இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.உறுப்பினர் சேர்க்கை நடத்தி முடிப்பதற்கு, இன்னும் 30 நாட்களே இருக்கின்றன. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது ஒதுக்கி, கட்சியினர் கலந்துரையாட வேண்டும்.பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்திற்கு இழைத்து உள்ள, இழைக்கவுள்ள அநீதியை, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம். அடுத்த 30 நாட்களில், தமிழகத்தில் மொத்தமுள்ள 68,000 ஓட்டுச்சாவடிகளிலும் சேர்த்து, இரண்டரை கோடி பேரை தி.மு.க., உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.நாம் உருவாக்கியுள்ள, 'பூத் டிஜிட்டல் ஏஜென்ட்'கள், கட்சிக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர்வரும் சட்டசபை தேர்தலுக்கும், தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்த வேண்டும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. எந்தெந்த ஓட்டுச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என தெரிந்தால், அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்குவோம்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

Ramesh Sargam
ஜூலை 25, 2025 21:12

ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள். தவறு. ஒவ்வொரு வீட்டிலும் துண்டு சீட்டு பார்த்து 10 நிமிடம் படியுங்கள்.


Irulappanalagarsamy
ஜூலை 23, 2025 07:50

திரு.முதல்வர் அவர்களே, எனது வீட்டில் அருகில் கழிவுநீர் வாய்க்கால் மிகவும் மோசமா உள்ளது பலமுறை பரவை பெருஊராட்சி அதிகாரி இதுவரை எங்கள் வீடு அருகில் வரவே இல்ல ஊர்மீட்சிக்குளம் புகைப்படம் எல்லாம் ஜிம் செல்லுக்கு அனுப்பியுள்ளேன். அருகில் குழந்தைகள் பள்ளி உள்ளது.உதவவும் நன்றி


Yaro Oruvan
ஜூலை 22, 2025 12:56

10 நிமிஷம் பேசணுமா விடிஞ்சது போதும் முதல்வரே கிளம்புங்க காத்து வரட்டும் ..


Matt P
ஜூலை 19, 2025 21:33

இப்படியெல்லாம் கட்சி வளர்ப்பு பொழைப்பு நடத்த வேண்டியிருக்கு. நாளிதழ் படிப்பதன் மூலமும் டிவி வாயிலாகவும் அவர்களுக்கே தெரிந்திருக்க வேண்டும் இந்த ஆட்சி இனியும் நீடிக்கலாம் என்று. நாங்க நல்லா தான் செஞ்சிட்டிருக்கோம் என்று மக்களை மூளை சலவை செய்ய வேண்டும் 10 நிமிடம் என்று சொல்வதிலிருந்தே தெரிகிறது மக்கள் மாறி விட போகிறார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கு என்று.


suresh guptha
ஜூலை 19, 2025 15:27

ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை


ரங்ஸ்
ஜூலை 19, 2025 07:35

ஐயையோ இதுக்கு மேல தாங்காதுடா சாமி


பாரத புதல்வன்
ஜூலை 18, 2025 14:04

தினமலர் நிர்வாகத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்! இங்கு பதிவிடும் கருத்துக்களை தினமும் அப்படியே செய்தித்தாளில் பிரசுரித்து வெளியிட்டால் நலம்... அப்படியே முதல்வர் குடும்பத்தினர், அமைச்சர் குடும்பத்தினர் அனைவரும் படித்து அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருமாறு பாரத மக்கள் அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.


Ramesh Sargam
ஜூலை 18, 2025 13:58

பத்து நிமிடம் மிரட்டுங்கள்.


kumar
ஜூலை 18, 2025 13:39

பேசிட்டு மட்டும் வரணும் ஏதாவது தள்ளிக்கிட்டு வந்துடாதீங்க


subramanian
ஜூலை 18, 2025 12:36

ஸ்டாலினை என்ன சொல்லலாம்?. கூட்டு கிளி . பொம்மை, எழுதி கொடுப்பதை கூட. தப்பு தப்பா படிக்கிறார்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2025 13:20

திணிக்கப்பட்ட வாரிசுகள் வேறு எப்படித்தான் இருக்க வேண்டும் ? உங்களது எதிர்பார்ப்பு மிகவும் அதிகம் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை