உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த சபாநாயகர்

செயற்கை நுண்ணறிவு குறித்து எச்சரித்த சபாநாயகர்

சென்னை:''செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, வெளிப்படையானதாக, உண்மைத் தன்மை உடையதாக இருக்க வேண்டும்,'' என, சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், 67 வது காமன்வெல்த் பார்லிமென்ட் மாநாடு, கடந்த 5ல் துவங்கி 8 ம் தேதி வரை நடக்கிறது. இதில், தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். மாநாட்டின் ஒரு பகுதியாக, 'பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு - வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.இதில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''செயற்கை நுண்ணறிவு வழியே தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில், தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுகின்றன. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 'செயற்கை நுண்ணறிவு' பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மை உடையதாகவும், இருக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை