உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆந்திராவில் நடிகை கஸ்துாரியை தேடும் தனிப்படை போலீசார்

ஆந்திராவில் நடிகை கஸ்துாரியை தேடும் தனிப்படை போலீசார்

சென்னை: தெலுங்கர் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்துாரி, ஆந்திராவில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், தனிப்படை போலீசார், அவரை தேடி அங்கு சென்றுள்ளனர்.சென்னையில் கடந்த, 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நடிகை கஸ்துாரி பேசுகையில், தெலுங்கர் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறினார். அதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, 'வேண்டுமென்றே சிலர் என் பேச்சிற்கு உள்நோக்கம் கற்பித்து, அதை சமூக வலைதளத்தில் திரித்து வெளியிடுகின்றனர்' என, விளக்கம் அளித்தார்.அதன்பின், 'தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து பேசியதை திரும்பப் பெறுவதாகக் கூறி, பேசியதற்கு மன்னிப்பும் கோரினார். இதற்கிடையே, தெலுங்கு அமைப்பினர், சென்னை, மதுரை என, பல இடங்களில், கஸ்துாரி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.சென்னை எழும்பூர் மற்றும் மதுரை மாவட்டம் திருநகரில், கஸ்துாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி, கஸ்துாரிக்கு சம்மன் வழங்க, போயஸ் கார்டனில் உள்ள, அவரது வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டியிருந்தது. அதைத் தொடர்ந்த, தனிப்படை அமைத்து, கஸ்துாரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கஸ்துாரி மொபைல் போன், கடைசியாக ஆந்திர மாநிலத்தில் 'சுவிட் ஆப்' செய்யப்பட்டு இருப்பதால், தனிப்படை போலீசார் அவரை தேடி அங்கு சென்றுள்ளனர். இதற்கிடையே, முன் ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கஸ்துாரி மனு தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Narayanan
நவ 12, 2024 16:24

தமிழக காவல் துறை செந்தில்பாலாஜி தம்பியை ஏன் தேடி கொண்டுவரவில்லை ? கஸ்தூரி அம்மையார் மன்னிப்பு கேட்டுவிட்டார் . ப்ரச்சனை அத்துடன் முடிந்துவிட்டது .ஆனால் அவர் பிஜேபியை ஆதரிப்பதாலும், பிராமண சமூகத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்த அவதூறு வழக்கை கையில் எடுத்து தேடுதல் வேட்டைக்கு அலைகிறது வேடிக்கை .


Narasimhan
நவ 12, 2024 13:37

லாஜிக் இடிக்குதே. அந்தம்மா தெலுங்கர்களை அவமரியாதையுடன் பேசியிருந்தால் தெலுங்கர்களிடமே எப்படி சரணடைவார்.


MADHAVAN
நவ 12, 2024 11:12

இதுக்கு எதுக்கு தனிப்படை ?


Minimole P C
நவ 12, 2024 08:14

What a surprise? An actress who was told as described Telugus in a unwanted way went to Telugu desam to hide herself and Telugu people there are not serious about her hiding, whereas the Telugu people of TN, got so much wrath for her speech and went to extent filing complaints. Another surprise is TN police also took it serious and went to Andhra. Political dramas crossed every limit.


கத்தரிக்காய் வியாபாரி
நவ 12, 2024 16:14

Telugu people of TN you mean DMK?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை