தீபாவளிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட 5 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.1.கன்னியாகுமரி சூப்பா் பாஸ்ட் ரயில்
அக்.29, மற்றும் நவ.5 ஆம் தேதி, கன்னியாகுமரி சூப்பா் பாஸ்ட் ரயில் சென்னை சென்ட்ரலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமாிக்கு மறுநாள் 12.15 மணிக்கு வந்து சேரும்.தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார்,கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோயில், வழியாக கன்னியாகுமரி வந்தடையும்.அக்-30 மற்றும் நவ.6 ஆம் தேதியன்று கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
2.சென்னை-செங்கோட்டை ரயில்
அக்.30 மற்றும் நவ.6 ஆம் தேதி சென்னை-செங்கோட்டை ரயில், சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மறுநாள் காலை 9.20 மணிக்கு செல்லும்.பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை,விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடயநல்லுார், தென்காசி வழியாக செங்கோட்டை வந்தடையும்.அதேபோல செங்கோட்டையிலிருந்து இரவு 7.30 புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.3. மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்
நவ. 2 ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இரவு 11.50 புறப்பட்டு மறுநாள் மாலை 4 மணிக்கு மங்களூரு வந்து சேரும்.பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,
ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஷோரனுார், திரூர், கோழிக்கோடு,
வடகரா,தலச்சேரி,கண்ணுார், பய்யனுார், கன்ஹன்காட், காசரகாட், வழியாக
மங்களூரு வந்தடையும்.நவ.3 ஆம் தேதி மங்களூருவில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல்க்கு அடுத்த நாள் காலை 11.10 மணிக்கு வந்துசேரும்.4. தாம்பரம்-கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் ரயில்
அக்.29, நவ.5 மற்றும் 12 ஆம் தேதிகள் இயக்கப்படும்.இது தாம்பரத்திலிருந்து இரவு 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்து சேரும்.செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர் கோயில் வழியாக கன்னியாகுமரி வந்தடையும்.இதே போல் அக்.29, நவ.5 மற்றும் 12 ஆம் தேதிகளில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் தாம்பரத்திற்கு அதிகாலை 4.20 க்கு வந்து சேரும்.
5.பெங்களூரு- கொச்சுவேலி அந்த்யோதயா ரயில்
பெங்களூரு- கொச்சுவேலி அந்த்யோதயா ரயில் நவ.4 ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.கொல்லம், காயன்குளம், செங்கனுார், திருவல்லா, கோட்டயம்,எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூரு வந்தடையும்.அதேபோல திரும்ப நவ.5 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.ரயில்கள் ரத்து
டானா புயல் காரணமாக கீழ்காணும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவிப்பு* இன்று (அக். 23) இரவு 7:55 மணிக்கு திப்ருகர்கில் இருந்து புறப்படும் திப்ருகர்க் - கன்னியாகுமரி 'விவேக்' ரயில் (22504), மருமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5:25 மணிக்கு புறப்படும் ரயில் (22503) முழுமையாக ரத்து.* நாளை (அக். 24) நள்ளிரவு 1:50 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - ஷாலிமார் ரயில் (06087) முழுமையாக ரத்து.* இன்று (அக். 23) அதிகாலை 3:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - புருலியா விரைவு ரயில் (22606) முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.