வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழன் எப்போதும் பொறுப்புணர்ச்சி மிக்கவன். தனது குடும்பத்தினர் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். ஆனால், மக்களிடம் கூடுதல் கட்டணங்களை கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்கள் அவர்கள் நிம்மதியாக சொந்த ஊருக்கு சென்ற வரக்கூட போதிய போக்குவரத்து வசதிகளை செய்யாமல் கண்டனத்திற்குரியது. மேலும், ஒன்றிய அரசு நினைத்தால் இன்னும் போதிய ரயில்களை இயக்க முடியும். ஆனால், இங்கே இருக்கும் அரசியல்வியாதிகளின் பினாமிகள் அதை ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தடுத்து வருகிறார்கள். முன்பு இரட்டை ரயில்பாதை இல்லாததுதான் காரணம் என்றார்கள், ஆனால் இன்றைக்கு இரட்டை ரயில் பாதை இருந்தும் கூடுதல் ரயில்களை இயக்க மறுப்பது ஏன்? இப்படி செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி அப்புறம் பிரீமியம் தட்கல் மற்றும் தட்கல் என்று மக்களை கொள்ளையடிக்க வேண்டியது. ரயில் நிர்வாகத்தால் பயண சீட்டுக்கள் உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் அதை ரத்து செய்யும்போது அதற்கும் ஒரு இருக்கைக்கு ரூ.60 வீதம் பிடித்தம். இது எங்கே உள்ள சட்டம் என்று தெரியவில்லை. கொள்ளையடித்து ஒன்றே குறிக்கோளாய் செயல்படுகிறார்கள். மோடிஜிக்கு இது தெரிந்துதான் நடக்கிறதா என்று தெரியவில்லை. மற்றவர்கள் தப்பு செய்தால் அரசிடம் கேட்கலாம். ஆனால், அரசே தப்பு செய்தால்?
தமிழக தலைநகரம் சென்னையில் சுமார் அறுபது சத்தம் மக்கள் தென் மாநிலத்தை சார்ந்தவர்கள் தீபாவளி பொங்கல் பண்டிகைகள் தென் மாவட்ட மக்களை இழுக்கிறது ஒரே தீர்வு சென்னை எழும்பூர் டு மதுரை வரை இரண்டு மணிநேர வித்திசாத்தில் உணரேசெர்வே ரயில்களை இயக்கினால்தான் கூட்டம் குறையும். இந்த வகை ரயில்களில் பாண்டியன் கட்டணம் வாங்கலாம்