உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: மதுரை கோட்ட ரயில்வே பி.ஆர்.ஓ., அலுவலக அறிவிப்பு: கச்சனவிளை புரட்டாசி சனி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் (1.10.11 மற்றும் 8.10.11) இயக்கப்படுகின்றன. நெல்லையில் பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கச்சனவிளைக்கு மதியம் 1.08 மணிக்கு செல்லும். அங்கிருந்து 1.12க்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு மதியம் 2 மணிக்கு செல்லும். நெல்லையில் மாலை 3 க்கு புறப்படும் ரயில், கச்சனவிளைக்கு மாலை 4.13 க்கு வரும். அங்கிருந்து மாலை 4.17 க்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு மாலை 5 க்கு வரும். திருச்செந்தூரில் காலை 9.20 க்கு புறப்படும் சிறப்பு ரயில், கச்சனவிளைக்கு காலை 9.48 மணிக்கு வரும். அங்கிருந்து காலை 9.52 க்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு காலை 11.10 க்கு வரும். திருச்செந்தூரில் காலை 11.40 க்கு புறப்படும் ரயில், கச்சனவிளைக்கு பகல் 12.08 மணிக்கு வரும். அங்கிருந்து பகல் 12.12 க்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு மதியம் 1.40 க்கு வரும். சிறப்பு ரயில்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி