ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னை தாம்பரம் - ராமேஸ்வரம் மற்றும் கோவை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே அறிக்கை: தாம்பரத்தில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 9:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:00 மணிக்கு தாம்பரம் வரும் கோவையில் இருந்து, வரும் 29ம் தேதி இரவு 7:15 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். ராமேஸ்வரத்தில் இருந்து, வரும் 30ம் தேதி இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு கோவை செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.