உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசு தொகுப்பு மூன்றாக பிரிப்பு? நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு திட்டம்!

பொங்கல் பரிசு தொகுப்பு மூன்றாக பிரிப்பு? நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பை மூன்றாக பிரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனையில் அரசு இறங்கியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t9ey07lx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு வாயிலாக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1,000 ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதற்கு, 2,500 கோடி ரூபாய் வரை அரசு செலவிடுகிறது. அனைத்து மத மக்களும் தமிழர் பண்டிகையான பொங்கலை கொண்டாடும் வகையில், பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில், 1,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.எனவே, பொங்கல் பரிசு தொகுப்பை, மூன்றாக பிரித்து கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் வழங்கலாம் என்ற யோசனை அரசுக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக, முதற்கட்ட ஆலோசனை நிதித்துறையில் நடந்து வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு, ஒரே நேரத்தில் நிதி ஒதுக்குவதால், அரசுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மூன்றாக பிரித்து நிதி ஒதுக்கீடு செய்தால், நெருக்கடியை அரசால் ஓரளவிற்கு சமாளிக்க முடியும்; மூன்று மதத்தினரையும் திருப்திப்படுத்த முடியும். எனவே, இது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அரசு முடிவெடுக்கவுள்ளது. மத தலைவர்களின் கருத்துக்களை பெற்று, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வரும் 2025ம் ஆண்டு வழக்கம் போல பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

A Karthikeyan
டிச 26, 2024 08:41

அப்படி என்றால் எல்லா மதத்திற்கும் ஒரேயொரு சட்டம் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கும் அரசு அறநிலையத்துறை அமைத்து நிற்வாகிக்க வேண்டும்


Balasubramaniam C
டிச 25, 2024 10:50

எந்த மதத்தினர் ஆனாலும் தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்கள் தமிழர்கள் தான் அந்த அடிப்படையிலான முறையாக தான் நடத்தப்பட்டவேண்டும்


சாண்டில்யன்
டிச 25, 2024 09:12

சிமோன் சிவநேசனுக்கு வழங்குவதில் குழப்பம் ஏற்படுமோ எப்படியோ மக்களை சாதி மத ரீதியாக காங்கிரஸ் பிளவுபடுத்துவதாக சொல்வார்கள்


Bala Sundaram
டிச 25, 2024 06:21

பொங்கல் என்று சொன்னாலே அது தமிழர் பண்டிகை தானே..... அப்படின்னா தமிழன் என்கிற வரலாறே இல்லாமல் அழிச்சுபுடனும்..... கையாலாகாத அரசு அதற்கு ஒரு முதலமைச்சர் போதாது என்று துணை முதலமைச்சர் ???? தக்திகளின் கையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் தமிழகம்


Mahendran Puru
டிச 24, 2024 20:03

அவரவர் மத பண்டிகைப்படி பொருட்கள் வழங்குவதில் என்ன தவறு. பாப்கார்ன் வரிக்கு வாயை திறக்கக் காணோம்.தம்பிமார், ஆருத்ரா அண்ணாமலை முதற்கொண்டு.


பேசும் தமிழன்
டிச 24, 2024 18:43

பொங்கல் பரிசு.... வாங்க தமிழர்கள் என்று கூறி அனைவருக்கும் கிடைக்கும்..... அப்போது பரிசு வாங்கும் கிருஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் அவர்களது பண்டிகைக்கும்..... இரண்டு முறை பரிசு என்று ஆகி விடாமல் இருந்தால் சரி...... இல்லையென்றால் பொங்கல்.... கிறிஸ்துமஸ்.... ரம்ஜான்..... அனைத்து பண்டிகைக்கும்.... அனைவருக்கும் 1000 கொடுத்தாலும் சரி தான்.


raviraj PRavichandiran
டிச 24, 2024 17:27

Super.nice


james arul rayan
டிச 24, 2024 17:20

தீபாவளிக்கு மட்டுமே இந்துக்களுக்கு விடுமுறை என மாற்றம் செய்தபின் உங்கள் யோசனையை நடைமுறைப்படுத்தலாம்


தமிழன்
டிச 24, 2024 15:44

அப்படின்னா ரம்ஜானுக்கு மட்டன் தருவார்களா ? ஒரு பள்ளிக்கு கூட மாணவனிடம் பொறுப்பு கொடுத்தால் கூட சிறப்பாக திட்டம் போடுவார்.. தமிழகத்திற்கு வந்த விதி என்ன செய்வது.. கலைஞரை போல என்று நினைத்து தமிழக மக்கள் ஏமாந்து விட்டார்கள் .. ஸ்டாலின் அரசு செய்த தவறுகளை சரி செய்ய குறைந்தது 20 வருஷம் ஆகும். அதனால் திமுக இப்போ கலைஞரிடம் இல்லை.. திறமை இல்லாத ஒரு நிர்வாகியிடம் இருக்கிறது என "இனி வேண்டாம் திமுக" என்பதில் உறுதியாக இருங்கள்..


தமிழன்
டிச 24, 2024 15:41

நிதி நெருக்கடி என்றால் எதற்கு மாதம் 1000 ரூபாய் ஆளுக்கு ஒருத்தர் என எல்லோருக்கும் தருகிறார்கள்.. இதுவரை இல்லாத நெருக்கடி இப்போ எப்படி வருகிறது.. இப்போவாவது புரிகிறதா.. திறமை இல்லாத அரசு.. இந்த அரசு செய்த குழப்படிகளை சரி செய்ய நிச்சயம் 20 வருடங்கள் ஆகும்.. அதனால் மீண்டும் வேண்டாம் திமுக என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை